Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தி லெஜண்ட் படத்தின் இரண்டாவது பாடலான "வாடிவாசல்" ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

madhankumar May 18, 2022 & 13:04 [IST]
தி லெஜண்ட் படத்தின் இரண்டாவது பாடலான Representative Image.

தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் ஆரம்ப காலகட்டத்தில் ஹன்சிகா, தமன்னா உடன் இணைந்து தனது நிறுவன விளம்பர படங்களில் நடித்துவந்தார். 

இதனிடையே சினிமாவின் மீதிருந்த ஆர்வத்தின் காரணமாக படத்தில் கதாநாயகனாக நடிக்க முடிவெடுத்த அவர் தான் சொந்தமாக சரவணா ஸ்டார் ப்ரொடக்சன் என்ற நிறுவனத்தின் மூலம் தயாரித்து ஒரு புதிய படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்திற்கு "தி லெஜண்ட்" என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தை ஜேடி மற்றும் ஜெர்ரி என்ற இரண்டு இயக்குனர்கள் இயக்கி வருகின்றனர். மேலும் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுதேலா நடித்துவருகிறார்.

இந்த படத்தின் பாதி காட்சிகளில்நடித்த விவேக் கடந்த ஆண்டு உயிரிழந்துவிட்டதால் அவருக்கு பதிலாக யோகிபாபு இந்த படத்தில் நடித்துவருகிறார். பல ஆண்டுகளுக்கு பிறகு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் "மொசலோ மொசலு" என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான "வாடிவாசல்" என்ற பாடல் வரும் மே20 அன்று வெளியாகவுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது. வாடிவாசல் என்ற பெயரில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் படம் ஒன்று உருவாக்கவுள்ளது. இதனிடையே இந்த பாடலின் ஹாஸ் டாகும் சேர்ந்து ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்