Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அவதார் கேரக்டர்களாகவே மாறிய தியேட்டர் ஊழியர்கள்.. புதுவையில் ருசிகரம்!!

Sekar Updated:
அவதார் கேரக்டர்களாகவே மாறிய தியேட்டர் ஊழியர்கள்.. புதுவையில் ருசிகரம்!!Representative Image.

அவதார் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ள நிலையில், புதுவையில் தியேட்டர் ஊழியர்கள் அவதார் கேரக்டரை இமிடேட் செய்யும் வகையில் வேடம் அணிந்து அசத்தியுள்ளனர்.

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் அவதார். தற்போது இதன் இரண்டாம் பாகம் அவதார்-த வே ஆப் வாட்டர் என்ற பெயரில் நேற்று முன்தினம் வெளியானது.

உலகம் முழுவதும் தமிழ் உட்பட 160க்கும் மேற்பட்ட மொழிகளில் இந்த படம் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. புதுச்சேரியிலும் இந்த படம் வெளியாகியுள்ள நிலையில், புதுவை-கடலூர் சாலையில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள தனியார் திரையரங்கு ஒன்றிலும் இந்த படம் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ரசிகர்களை கவரும் வகையில், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அவதார் திரைப்படத்தில் வரும் கேரக்டர்கள் போலவே வேடம் அணிந்து, திரையரங்கிற்கு வரும் ரசிகர்களை வரவேற்று அசத்துகின்றனர். 

இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அவதார் போல் வேடம் அணிந்து நிற்கும் தியேட்டர் ஊழியர்களுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்