Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

காங்கிரஸில் இணையும் உலக நாயகி திரிஷா? அவரே போட்டுடைத்த உண்மை!

UDHAYA KUMAR Updated:
காங்கிரஸில் இணையும் உலக நாயகி திரிஷா? அவரே போட்டுடைத்த உண்மை!Representative Image.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக வந்து அனைத்து ரசிகர்களையும் கட்டிப் போட்டுவிட்டார் திரிஷா. உண்மையிலேயே குந்தவை கதாபாத்திரத்துக்கு எந்த ஒரு ரசிகரையும் கேட்டால் அவரின் பெயரையே நிச்சயம் சொல்லியிருப்பார்கள். அப்படி கணக்கச்சிதமான பொருத்தம். திரிஷா ஒரு பேரழகி என்று பலரும் தங்கள் சமூக வலைத்தள கணக்கில் பதிவிட்டு வந்தனர் நெட்டிசன்கள். 

மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி, சூர்யா, விஜய், அஜித், கமல்ஹாசன், விக்ரம், ரஜினிகாந்த் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார். ஆனாலும் இப்போதும் கூட அதே அழகுடன் இளமை ததும்ப காட்சியளிக்கிறார். இதற்கு காரணம் என்ன என்பது உட்பட பல கேள்விகளுக்கு பதிலளித்தார் திரிஷா. 

அதில் முக்கியமாக திரிஷா காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக ஒரு தகவல் வருகிறதே உண்மையா என கேட்க , அதற்கு சில நொடிகள் கூட தாமதிக்காமல்,  அந்த தகவல்களில் ஒரு சதவிகிதம் கூட உண்மையில்லை. எனக்கும் அரசியலுக்கும் துளியளவும் சம்மந்தம் இல்லை எனப் பொருள்படும்படி பதிலளித்தார். 

நயன்தாராவுக்கு லேடி சூப்பர் ஸ்டார் என பட்டம் வழங்கப்பட்ட நிலையில், திரிஷாவுக்கு உலகநாயகி எனும் பட்டத்தை வழங்கி ரசிகர்கள் பலர் பேசி வருகின்றனர். இதற்கு காரணம் நயன்தாரா, ரஜினிகாந்த் போல வெற்றிக்கான படங்களில் மட்டும் நடித்து வருகிறார். ஆனால் திரிஷாவோ கமல்ஹாசன் போல மாறுபட்ட கதையம்சங்கள் பலவற்றை முயற்சிக்கிறார். தோல்வியடைந்தாலும் மீண்டும் மீண்டும் புது முயற்சிகளில் ஈடுபடுகிறார் என்கிறார்கள். 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்