Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் இன்றைய எபிசோட் ப்ரோமோ மற்றும் பல தகவல்கள்.. | Vijay TV Thendral Vanthu Ennai Thodum Serial

Priyanka Hochumin Updated:
தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் இன்றைய எபிசோட் ப்ரோமோ மற்றும் பல தகவல்கள்.. | Vijay TV Thendral Vanthu Ennai Thodum SerialRepresentative Image.

தென்றல் வந்து என்னை தொடும் சீரியல்: கடந்த 16 ஆகஸ்ட் 2021-இல் இருந்து விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை மதியம் 3.00 மணிக்கு ஒளிப்பரப்பாகும் சீரியல் தென்றல் வந்து என்னை தொடும். இந்த சீரியல் கெளகோர் என்னும் பெங்காலி தொடரின் அதிகாரபூர்வ ரீமேக் ஆகும். இதில் முக்கிய கதாபாத்திரமாக பவித்ரா ஜனனி, வினோத் பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியலில் நடித்துள்ள நடிகர், நடிகைகளின் உண்மையான பெயர்கள், கதை, நேரம், இன்றைய எபிசோடு மற்றும் ப்ரோமோ உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்பதிவின் மூலம் விரிவாக பார்க்கலாம்.

தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் நடிகை, நடிகர்கள்:

உண்மையான பெயர் [Real Name]

கதாபாத்திரத்தின் பெயர் [Character Name]

பவித்ரா ஜனனி

அபிநயா

வினோத் பாபு

வெற்றிசெல்வன்

சுடர் சாம்

சுடர்விழி வெற்றிசெல்வன்

ஷௌர்யா ஷஷாங்க் ரமேஷ்

பவானி/பரமேஸ்வரன்

மரியா ஜூலியானா

கண்மணி

தர்ஷிகா

ராதா

கிருத்திகா லட்டு

விஜி

சத்ய சுதா

கலைசெல்வன்

ரம்யா ஜோசப்

நந்தினி

ராஜ் குமார் மனோகரன்

அன்புசெல்வன்

சியமந்த கிரண்

சித்ரா

ஸ்ரீதர்

நீதிபதி சங்கரநாராயணன்

 

தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் முழு விவரம்:

சீரியல் பெயர்

தென்றல் வந்து என்னை தொடும்  

சேனல்

விஜய் டி.வி

ரிலீஸ் தேதி

 16 ஆகஸ்ட் 2021

ஒளிப்பரப்பு நேரம்

3.00 PM - 03.30 PM [22 நிமிடங்கள்]

ஒளிப்பரப்பாகும் நாள்

திங்கள் முதல் சனி வரை

இயக்குநர்

அப்துல் கபீஸ் ஹபீஸ்

தயாரிப்பாளர்

ஆர்.ராஜேஷ்

பாக்ஸ் ஸ்டுடியோ மற்றும் சமுகா என்டர்டெயின்மென்ட்

தயாரிப்பு நிறுவனம்

தளிர் புரொடக்ஷன்ஸ் [1-495 எபிசோட் வரை]

பாக்ஸ் ஸ்டுடியோ மற்றும் சுமுகா என்டர்டெயின்மென்ட் [495 - தற்போது வரை]

ஓடிடி தளம்

Disney+Hotstar

 

தென்றல் வந்து என்னை தொடும் சீரியலின் கதை..

அமெரிக்காவில் படித்த அபிநயா இந்திய கலாச்சாரத்தை பின்பற்றும் பெண்ணாவாள். திடீரென ஒரு நாள் திருமணத்தின் முக்கியத்துவம் பற்றி ஒன்றுமே தெரியாத ரவுடி வெற்றியை சந்திக்கிறாள். கோவிலில் திருமணம் செய்ய முயலும் காதல் ஜோடியை தடுக்கிறான் வெற்றி. அதனை பார்த்த அபி அவர்களுக்கு உதவி செய்கிறாள். இதனால் கடும் கோபத்தில் இருந்த வெற்றி எந்த யோசனையும் இன்றி அபியின் கழுத்தில் தாலியை கட்டி விடுகிறான். இதனைக் கண்ட அபியின் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகின்றனர். அபியிடம் அந்த தாலியை கழட்டி தருமாறு கேட்கின்றனர். ஆனால் யார் என்ன சொன்னாலும் அதனை ஏற்க மறுக்கிறாள் அபிநயா.

தனக்கு அந்த தாலியை தெய்வமே கொடுத்ததாக நம்புகிறாள் அபி. எனவே, தன்னுடைய வீட்டை விட்டு வெளியேறி வெற்றியின் வீட்டிற்கு செல்கிறாள். அங்கேயும் யாருமே அபியை ஏற்றுக்கொள்ளவில்லை. தனி ஆளாக வெற்றி மற்றும் இரண்டு குடும்பங்களையும் எதிர்த்து தன்னுடைய தாலிக்கான அங்கீகாரத்தை பெற போராடுகிறாள் அபிநயா. இருதுருவங்களாக இருக்கும் வெற்றி மற்றும் அபிநயா எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பது தான் கதைக்களம்.

தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் இன்றைய எபிசோட்

தென்றல் வந்து என்னை தொடும் சீரியலின் இன்றைய எபிசோடை பார்க்க இதை க்ளிக் செய்யவும்.

தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் ப்ரோமோ

டிவியில் ஒளிப்பரப்பாவதற்கு முன்னபாக, விஜய் டி.வி வெளியிடும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலின் ப்ரோமோவை பார்க்க இதை க்ளிக் செய்யவும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்