Tue ,Mar 05, 2024

சென்செக்ஸ் 73,668.76
-203.53sensex(-0.28%)
நிஃப்டி22,356.70
-48.90sensex(-0.22%)
USD
81.57
Exclusive

Thendral Vanthu Ennai Thodum Today Episode: வெற்றிக்கு நடக்கப்போகும் விபரீதம்...அபியின் முடிவால் அனைவரும் ஷாக்!

Priyanka Hochumin June 23, 2022 & 14:00 [IST]
Thendral Vanthu Ennai Thodum Today Episode: வெற்றிக்கு நடக்கப்போகும் விபரீதம்...அபியின் முடிவால் அனைவரும் ஷாக்!Representative Image.

Thendral Vanthu Ennai Thodum Today Episode: ஒண்ணா சேந்து வாழணும்னு நினைக்கிறவங்க இப்ப ஏன் பிரிஞ்சிருக்காங்க? என்னும் கேள்வியைத் தான் இப்ப தென்றல் வந்து என்னை தொடும் சீரியல பார்த்து கேக்கணும்.

நேற்று எபிசோடு | Vijay TV Latest Promo  

சக்தி வெற்றியிடம் தான் அபியை காதலிக்கும் தகவலை கூறுகிறான். இதனை கேட்டதும் இடி விழுந்தது போல் திகைத்து பொய் நிற்கிறான் வெற்றி. இது மட்டும் இல்லாது சக்தி காபியுடன் சேர வெற்றி போய் அம்பிகிட்ட பேசணுமா? இது எப்படி இருக்கு. நல்லா கலகலன்னு போயிடு இருந்த சீரியல் இப்ப அழுதுகிட்டே இருக்குது. பிறகு வெற்றியின் வீட்டிற்கு சென்று சூர்யா கண்ணா பின்னான்னு பேசுகிறான். எல்லாரும் குழம்பி போய் இருக்கும் சமயத்தில் வெற்றி அபியுடன் இருந்தது, சுவர் ஏறி குதித்து அபியை பார்க்க வந்தது என்று அனைத்து ஆதாரத்தையும் வெற்றியின் குடும்பத்தினரிடம் சூர்யா காண்பிக்கிறான். வெற்றியின் குடும்பத்தினர் ஏன் இப்படி செய்கிறான் என்று கேட்கின்றனர்/

இன்றைய எபிசோடு | Thendral Vanthu Ennai Thodum Serial

இப்படி இரண்டு வீட்டிலையும் ஒரே கலையபரமாக இருக்க, அபி வெற்றி இருவரும் தங்கள் வாழ்க்கையை நினைத்து கண்ணீர் விடுகின்றனர். தனது தந்தை இப்படி ஒரு முடிவு எடுத்துவிட்டார் என்ற வேதனையில் அபி அழுகிறாள். வெற்றி அபிக்கு போன் செய்து பேசுகிறான், அபி அழுகையை கேட்ட உடன் அதை தாங்க முடியாமல் அவனும் அழுகிறான். எதுக்கு போன் பண்ண என்று அபி கேட்க, சக்தி தான் உங்கிட்ட பேச சொன்னான் என்கிறான். இப்ப எதுக்கு அவன பத்தி என்கிட்ட பேசுற, என்ன சொல்லணும் என்று அபி கேட்க. வெற்றி அதனை சொல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் தவிக்கும் காட்சி பார்ப்பவர்களை கண் கலங்க வைக்கிறது. அவன் உன்னைய லவ் பன்றானாம், உன்னைய கல்யாணம் செஞ்சிக்கணும் ஆச பட்றான் என்று சொன்னது அபி வந்ததே ஒரு கோவம். இதை பத்தி நீ எதுக்கு டா பேசுற, உனக்கு என்ன உரிமை இருக்கு என்று காச்சு மூச்சுனு அபி திட்டுகிறாள். உனக்கு சரியான பையன் அவன் தான், என்னைய மாறி ரவுடி கிடையாது. வெளிநாட்ல இருக்கான், கை நிறைய சம்பாதிக்கிறான் என்று சொன்னதும் அபி போனை தூக்கிப்போட்டு கதறி அழுகிறாள். வெற்றி அவள் அழுவதை கேட்டதும் தாங்க முடியாமல் அழுகிறான்.

அடுத்த நாள் பூங்காவனத்திற்கு தெரிந்த ஒருவரின் குழந்தையை கடத்தி வைத்து பணம் கேட்டு மிரட்டுவதாக ஒரு சீன். வெற்றி அதனை தட்டி கேட்க போகும் வழியில் அபி மாத்தி மாத்தி போன் செய்கிறாள். அவன் கோபத்துடன் அபியிடம் பேசி விட்டு போனை கட் செய்கிறான். பிறகு அந்த களவாணியை துரத்தி பிடிக்கும் சமயத்தில் அவன் எஸ்கேப் ஆகிறான். கடுப்பான வெற்றி பூங்காவனத்திடம் சென்று இப்படி மிஸ் ஆகிவிட்டது என்று புலம்புகிறான். அப்பொழுது பூங்காவனத்தின் அண்ணன் பையன் வந்தது வெற்றிக்கு ஒரு மாறி டவுட் வருகிறது. பிறகு வெற்றி வேதனையுடன் அபியை பார்க்க அவளின் வீட்டுக்கு செல்கிறான். நீ எப்படி இங்க வந்த, நீ இங்க வரத்து, உங்களுக்கு நான் ஹெல்ப் பண்ணது வீட்ல எல்லாத்துக்கும் தெரிஞ்சு போச்சு என்கிறாள் அபி. உங்க வீட்ல எல்லாத்துக்கும் தெரியும்னு எனக்குத் தெரியும், இப்ப கூட நான் வந்தது யாருக்குத் தெரிந்தாலும் பரவால்ல, நீ எதுக்கு போன் பண்ண அத சொல்லு என்கிறான். எனக்கும் சக்திக்கும் வீட்ல கல்யாணம் ஏற்பாடு பண்ணிருக்காங்க என்று அழுதுகொண்டே சொல்கிறாள். அவள் அதை சொல்லும் பொழுது வெற்றிக்கு ஏற்பட்ட வலி இருக்கே, அத பாக்க முடியல. பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு மைண்டு வாய்ஸ் இல் பேசுகின்றனர். வெற்றி, என்னைய கூட்டிட்டு போன்னு ஒரு வார்த்தை சொல்லு டி உன்னைய நான் தூக்கிட்டு போறேன் என்கிறான். அங்க அபி நீ தான என்னைய போக சொன்ன, நீ வான்னு கூப்பிடாம நான் வரமாட்டேன் என்று ஃபீல் பண்றாங்க. அவ்ளோ தாங்க இன்னைக்கு, பேசாம ரெண்டு பெரும் அவங்க லவ்வ சொல்லிட்டு போறத விட்டுட்டு இப்படியா பண்றது.  

Thendral vanthu ennai thodum serial, thendral vanthu ennai thodum today episode, thendral vanthu ennai thodum episodes, vijay tv latest promo, thendral vanthu ennai thodum latest promo, 

உடனுக்குடன் செய்திகளை (Serial Updates) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்