Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Thendral Vanthu Ennai Thodum Today Episode: வெற்றி அபியை பிரிக்க நினைத்து...நோஸ் கட் வாங்கி அசிங்கப்படும் சித்ரா!

Priyanka Hochumin August 08, 2022 & 14:00 [IST]
Thendral Vanthu Ennai Thodum Today Episode: வெற்றி அபியை பிரிக்க நினைத்து...நோஸ் கட் வாங்கி அசிங்கப்படும் சித்ரா! Representative Image.

Thendral Vanthu Ennai Thodum Today Episode: இந்த வாரம் தொடக்கத்திலே அமோகமா ஆரம்பிக்கிதுப்பா தென்றல் வந்து என்னை தொடும் சீரியல். பாத்து நல்லா சிரிக்கலாம் அதே போல கொஞ்சம் செண்டிமெண்ட்டாவும் இருந்துச்சு, வாங்க இன்னைக்கு என்ன நடந்ததுன்னு பாப்போம்.

உங்களுக்கு ஞாபகம் இருக்கானு தெரியல போன வாரம் கடைசி எபிசோடுல ஒரு அக்கா வந்து ரவுடி பசங்கன்னு தெரியாம வீடு வாடகைக்கு குடுத்துட்டேன். இப்ப ரொம்ப ராவடி பண்றாங்க வீட்டையும் காலி பண்ண மாட்டேங்கிறாங்க என்று வெற்றியிடம் வந்து புலம்புறாங்க. அபி அவங்கள திட்டி அனுப்பிட்டா, இருந்தாலும் அபிக்கு தெரியாம வெற்றி அவங்கள அடிச்சி வீட்டை காலி பண்ண வச்சிட்டான். இதை சித்ரா வீடியோ எடுத்து அபிக்கு அனுப்பிட்டா. அதுக்கு இப்படி பண்ணீங்கன்னு கேட்ட அதுக்கு அந்த பொறாமை புடிச்சவ அபிக்கு உங்கள பத்தி தெரியனும்ல அதான் என்று சொல்லிவிட்டு செல்கிறாள்.

வெற்றி அபிக்கு போன் பண்ணி பேசுனத்துக்கு அப்புறம் தெரியவருது அவ இன்னும் அந்த வீடியோவை பாக்கலைன்னு. எப்படியோ பேச்சு குடுத்துட்டு வீட்டுக்கு போய் அம்பிகே தெரியாம அந்த வீடியோவை வெற்றி டெலீட் செய்றான். அப்புறம் இந்த காதல் ஜோடி எப்படி சண்டை போடறாங்கனு பாக்க வந்த சித்ரா வயித்தெரிச்சலோட தான் திரும்ப போறா. ஏன்னா அவங்க அப்படி கொஞ்சி கொஞ்சி சாப்பிட்டு இருந்தாங்க.

சரி இன்னையோட கதைக்கு வருவோம். எடுத்த உடனே அந்த உதவி கேட்ட அக்கா வெற்றிய பாத்து நன்றி சொல்ல வந்திருந்தாங்க. கமலா அவங்கள கண்டபடி திட்டி போக சொல்றா ஆனா சித்ரா நேத்து எஸ்கேப் ஆகிட்டீங்க இன்னைக்கு விட மாட்டேன்னு அவங்கள வெற்றி கிட்ட கூட்டிட்டு போறா. அபி அந்த அக்காவ பாத்த உடனே அவளும் திட்ட ஆரம்பிச்சிடுறா, நான் தான் நேத்தே சொன்னேன்ல ஏன் புருஷன் இனிமே அடி தடிலாம் பண்ண மாட்டாருன்னு. இப்ப எதுக்கு இங்க வந்திருக்கீங்கன்னு அவங்கள பேச விடாம தடுக்குறாள். வெற்றியோ பின்னாடி இருந்து சைகை காட்டி அவங்கள போக சொல்கிறான். இருப்பினும் விடாமல் முயற்சிக்கும் சித்ரா எப்படியோ அந்த உண்மையை அபியிடம் தெரிவிக்க போராடுகிறாள். ஆனால் கடைசியில் எந்த பலனும் இன்றி அவர்கள் திரும்புகின்றனர்.

பிறகு வீட்டின் வறுமை காரணமாக நந்தினி ரேஷன் கடைக்கு சென்று அரிசி, பருப்பு எல்லாம் வாங்கிட்டு வருகிறாள். இதனை பார்த்த வெற்றி மனம் உடைந்து தன்னிடம் இருக்கும் காசை அவளிடம் கொடுக்கிறான். இருப்பினும் நந்தினி அதனை வாங்க மறுக்கிறாள். இந்த காசுல வாங்கிட்டு போனா வீட்ல யாரும் சாப்பிட மாட்டாங்க, அப்புறம் அவங்க பட்டினியா தான் இருப்பாங்க என்று கூறுகிறாள். வெற்றி, ஏன் அண்ணி நீங்களும் அப்பா மாறி புரியாம பேசுறீங்க நான் இப்படி இருக்க காரணம் அப்பா தான என்று கூறுகிறான். ஆனால் நந்தினியோ வெற்றி செய்த தவறை சுட்டிக்காட்டி அங்கிருந்து சென்று விடுகிறாள். வீட்டுக்கு வந்து சமைத்த அனைவரையும் சாப்பிட அழைக்க, சாப்பாட்டின் நிறத்தை பார்த்து புகழ் மற்றும்  சித்ரா தெறித்து ஓடுகின்றனர்.

ரேஷன் அரிசில எதுக்கு சமசீங்க என்று கேட்டதும் வருமானம் இல்லைனா வேற என்ன பண்றது என்று கூறவும், புகழ் அவர்களுக்கு தெரியாமல் ஹோட்டல்ல போய் சாப்பிட செல்கிறான். இதை தெரிந்து கொண்ட கமலா ஹோட்டலுக்கு கொடுக்குற காச வீட்டுக்கு கொடுத்தா நல்லா செஞ்சி சாப்பிடலாம்ல என்று கேட்கிறாள். அதற்கு அரங்கநாதன் வெட்டிய செலவு பண்றதுக்கு எல்லாம் இவங்க யோசிக்க மாட்டாங்க, ஆனா வீட்டுக்கு குடுக்குறதுன்னா மட்டும் வலிக்கும் எல்லாம் தலையெழுத்து என்று புலம்புகின்றனர். பிறகு வேலையாக மாடிக்கு சென்ற நந்தினியிடம் ஏன்-கா நான் காசு தரேன் அதை வச்சி பொருள் வங்களாம்ல என்று கேட்டதும். அவங்க அதுக்கெல்லாம் ஒதுக்க மாட்டாங்க, இப்ப வீடு இருக்குற நிலைமையில்ல நான் வேளைக்கு போகலாம்னு முடிவு பண்ணிட்டேன் என்று தீர்க்கமான முடிவுக்கு வருகிறாள் நந்தினி.   

Thendral vanthu ennai thodum serial, thendral vanthu ennai thodum today episode, thendral vanthu ennai thodum episodes, vijay tv latest promo, thendral vanthu ennai thodum latest promo.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்