Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நள்ளிரவில் வெளியானது விக்ரம்! இணையதள வாசிகள் கொண்டாட்டம்...!

Udhaya Kumar July 08, 2022 & 11:52 [IST]
நள்ளிரவில் வெளியானது விக்ரம்! இணையதள வாசிகள் கொண்டாட்டம்...!Representative Image.

விக்ரம் திரைப்படத்தை தியேட்டர்களில் சென்று கொண்டாடியதைப் போலவே இப்போது இணையதளத்திலும் கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள். கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா என அனைத்து ரசிகர்களும் இந்த படத்தை கொண்டாடுகின்றனர். இந்த படத்தில் இருக்கும் சில குறைகளையும் பகிர்ந்து சுட்டிக் காட்டுகின்றனர். 

மேலும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் படத்தைப் பார்க்க குவிந்து வரும் ரசிகர்களும் ஏராளம் பேர் இருக்கிறார்கள். இதனிடையே வேறொரு பைரஸி தளத்தில் படம் வெளியாகி இரண்டு நாட்களாக இந்த காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில், சூர்யா, நரேன், செம்பன் வினோத், காளிதாஸ் ஜெயராமன், ஸ்வதிஸ்டா, சந்தானபாரதி,  ஏஜன்ட் டீனா வசந்தி உள்ளிட்ட இன்னும் பலர் நடித்திருந்த விக்ரம் படம் இன்று அதிகாலை 12.01 மணிக்கு ஹாட்ஸ்டாரில் வெளியானது. 

கடந்த ஜூன் 3ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியான போது இருந்த அதே எதிர்பார்ப்புடன் ஏற்கனவே வெற்றி என்கிற தெரிந்த சந்தோஷத்துடன் ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க காத்திருந்தனர்.  படம் வெளியானதும் விடிய விடிய விழித்திருந்து படத்தை பார்த்துவிட்டு அதனைக் குறித்த தகவல்களை சமூக வலைத்தளங்களில் எழுதி வருகின்றனர் ரசிகர்கள். 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்