Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

Thendral Vanthu Ennai Thodum Today Episode: வீட்டுக்கு திரும்பும் காதல் ஜோடி...என்ன செய்ய போறாங்க அவங்க வீட்ல! இன்னைக்கு செம்ம ட்விஸ்ட்!

Priyanka Hochumin July 25, 2022 & 14:35 [IST]
Thendral Vanthu Ennai Thodum Today Episode: வீட்டுக்கு திரும்பும் காதல் ஜோடி...என்ன செய்ய போறாங்க அவங்க வீட்ல! இன்னைக்கு செம்ம ட்விஸ்ட்!Representative Image.

Thendral Vanthu Ennai Thodum Today Episode: எப்பையும் போல மோதெல்ல ஆரம்பிச்சது காதல்ல தான் முடியும் என்ற கதையுடன் தொடங்கியது தென்றல் வந்து என்னை தொடும் சீரியல். அதே போல வீட்ல பெரியவங்க சேர்ந்து வாழுங்கன்னு சொல்லும் போது சண்டை வெற்றியும் அபியும் சண்டை போட்டுக்கிட்டாங்க. இப்ப அவங்க ரெண்டு பேரும் சேர்ந்துட்டாங்க, ஆனா வீட்ல ஏத்துக்க மாட்டேங்கிறாங்க. இப்படி போய்கிட்டு இருக்கும் சீரியலில் இன்று நடக்கும் காட்சிகளின் ஒரு சிறிய தொகுப்பு.

இதுவரை நடந்தது

கடந்த வாரம் வரை தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் தங்களின் காதலை ஏற்க மறுக்காத பெற்றோர்களை விட்டு ஆந்திரா செல்லும் அபி வெற்றி. அங்கு போய் இவர்களின் ரொமான்ஸ் பார்க்கும் ரசிகர்களை வெட்கப்பட வைக்கிறது. எலியும் பூனையுமாய் சண்டை போட்டுக்கொண்டிருந்த இவர்கள், தற்போது வரும் காதலிக்கும் காட்சிகள் கதையின் புது கோணத்தை நன்றாக வெளிப்படுத்துகிறது. இருப்பினும் அங்க போயும் கூட வெற்றி வழக்கம் போல அநியாயத்தை பார்த்தால் பொங்கும் வீரனாக இருக்கிறார். இதனால் கோவப்படும் வில்லன் அபியை கடத்திக்கொண்டு செல்கிறான். வெற்றி அபியை ஒருவழியாக மீட்டுக் கொண்டுவர அபியோ பயங்கர கோபத்துடன் காஞ்சிபுரத்துக்கு செல்லலாம் என்று கூறுகிறாள்.

இன்றைய எபிசோடு

ஊர்ல என்ன நிலவரம் என்று தெரியாமல் எப்படி செல்வது என்று அபிக்கும் வெற்றிக்கும் இடையில் வாக்குவாதம் நடைபெறுகிறது. இங்கு பூங்காவானம் ராதாவின் ஆட்டோ சங்கத்தினரிடம் பேச்சு வாரத்தை நடத்துகிறார். என்ன தான தப்பு நடந்தாலும் இப்படியா நடந்துப்பீங்க என்று பூங்காவனம் வருத்தத்தை தெரிவிக்க. அது புது ஆட்டோ ஸ்டாண்ட் ஆளுங்க இப்படி பண்ணிட்டாங்க இனிமேல் இப்படி நடக்காது என்று உத்தரவாதம் தருகின்றனர் ஆட்டோ ஸ்டாண்ட் சங்கத்தினர். இதனை தொடர்ந்து பூங்காவனம் வெற்றிக்கு கால் செய்து இங்க எல்லா பிரச்சனையும் சரி ஆகிடுச்சு, நீங்க தாராளாமாக கிளம்பி வரலாம் என்று கூறுகிறார். இதனை கேட்டதும் வெற்றி வாடி போலாம் ஊருக்கு துன்று அழைக்கிறான்.

இவ்ளோ நேரம் நான் கூப்பிடறப்ப வரலன்னு சொல்லிட்டு இப்ப உங்க அண்ணண் கூப்பிட்ட உடனே போலாம்னு சொல்றியா. நீ ஒன்னும் வர வேண்டாம், நானே தனியா கிளம்புறேன் என்று சண்டை போடுகின்றனர். அபியை சமாதானம் படுத்து வெற்றி பயன்படுத்திய ஆயுதம் என்ன தெரியுமோ? முத்தம். எஸ்! அபிக்கு ஒரு முத்தம் குடுத்த உடனே மேடம் சிரிச்சிட்டு ஆஃப் ஆகிட்டாங்க. அதுக்கு பிறகு அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கி விட்டு காஞ்சிபுரம் வந்து சேருகின்றனர் வெற்றி அபி. வரும் வழியில் அபி தனது தாய் மற்றும் பெரிம்மா தாங்கள் நலமாக இருப்பதாகவும், காஞ்சிபுரம் வந்து கொண்டிருப்பதாகவும் பேசுகிறாள். வெற்றி உடனே நந்தினி அன்னிக்கு போன் செய்து பேசுகிறான். அவளோ நீங்கள் அப்பா அம்மா கண்ணு முன்னாடி படுற மாறி இருங்க என்கிறாள். பிறகு தனது கணவன் கலைஇடம் அபி வெற்றிக்கு சாதகமாக அவனின் பெற்றோரிடம் பேசுமாறு வர்பொருதுகிறாள்.

வெற்றி திரும்ப வரும் விஷயம் தெரிந்ததும் பவானி செம்ம கடுப்பாகிறான். இவன் எதுக்கு இந்த சீரியல்ல இருக்கான், எதுக்கு அப்ப அப்ப பாம்பு புத்துக்குள்ள இருந்து தலைய எட்டிக் காமிக்கிற மாறி வந்து வந்து போறான்னு தெரியல. வெற்றி வந்த மட்டும் என்ன பண்ணுவான் அவன் பொண்டாட்டி விடுவாளா முன்ன மாறி இருக்க என்று பூங்காவனத்தை கேள்வி கேட்கிறான். அதற்கு என்னுடைய தம்பி என்னைய விட்டு எங்கையும் போகமாட்டான் என்று பெருமையாக பேசுகிறான்.   

Thendral Vanthu Ennai Thodum Today Episode, tthendral vanthu ennai thodum serial, thendral vanthu ennai thodum serial cast, thendral vanthu ennai thodum episodes, vijay tv latest promo, thendral vanthu ennai thodum latest promo, 

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்