Tue ,Mar 05, 2024

சென்செக்ஸ் 73,677.13
-195.16sensex(-0.26%)
நிஃப்டி22,356.30
-49.30sensex(-0.22%)
USD
81.57
Exclusive

Thendral Vanthu Ennai Thodum Today Episode: தப்புன்னு தட்டி கேட்கணும்...அபி விளாசும் அனல் பறக்கும் விவாதம்! இன்னைக்கு செம்ம ரோஸ்ட் காத்திருக்கு

Priyanka Hochumin August 12, 2022 & 10:00 [IST]
Thendral Vanthu Ennai Thodum Today Episode: தப்புன்னு தட்டி கேட்கணும்...அபி விளாசும் அனல் பறக்கும் விவாதம்! இன்னைக்கு செம்ம ரோஸ்ட் காத்திருக்குRepresentative Image.

Thendral Vanthu Ennai Thodum Today Episode: வீட்டின் வறுமை காரணமாக வேலைக்கு செல்ல முடிவெடுக்கும் நந்தினி. சென்ற இடத்தில் அவள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தெரிந்து கொண்ட அபி அடுத்து செய்ய போகும் அடாவடியான நிகழ்வுகளைப் பற்றி பார்க்கலாம் வாங்க.

என்ன தான் வெற்றியின் பெற்றோர்கள் அவனையும் அபியையும் ஏற்றுக்கொள்ள வில்லை என்றாலும், தங்களின் வாழ்க்கையை மிகவும் அழகாக வாழ்ந்து காமிக்கின்றனர். ஒரு கணவன் மனைவி இப்படி தான் இருக்க வேண்டும் என்று எதார்த்தமாக காண்பிக்கும் காட்சிகள் பார்ப்பவர்களை நெகிழ வைக்கிறது. இருப்பினும் தங்களின் பெற்றோர்கள் இன்னும் தங்களை ஏற்றுக்கொள்ள வில்லை என்ற வருத்தம் அவர்களை விட்டு நீங்கவில்லை, ஆனாலும் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு தான் இருக்கிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க வீட்டின் வறுமையை நீங்க வேலைக்கு செல்கிறாள் நந்தினி. போன இடத்துல என்ன டா இப்படி பண்றீங்க? என்று சொல்லும் அளவிற்கு கொடுமை படுத்துகிறார்கள். காலை முதல் மாலை வரை நின்று கொண்டே வேலை செய்வதோடு, மாடியில் அடிக்கிற வெயிலில் சாப்பிட வைப்பதும் என்று அராஜகம் செய்கின்றனர். மீண்டும் வீட்டிற்கு வந்து வீட்டு வேலையை பார்க்கும் நந்தினி சோம்பேறியாக வீட்டில் உட்காந்து தேய்த்துக் கொண்டிருக்கும் சித்ரா போன்ற ஆட்களுக்கு ஒரு ரோல் மாடலாக இருக்கிறாள். ஆனால் சித்ராலோ அதைப் பற்றியெல்லாம் கவலை படாமல் ஆமா பெரிய வேலை இந்த ஊரு உலகத்தில வேற யாருமேவா வேலைக்கு போனதில்ல என்று மட்டமாக பேசுகிறாள்.

இப்படி நந்தினி வேலைக்கு போனதால் கமலா உடம் முடியாமலும் அனைத்து வேலைகளையும் தானே செய்கிறாள். கலை ஒரு சில சின்ன சின்ன வேலைகளை செய்து அம்மாக்கு உதவுகிறான். அதனை கேலி செய்ய வந்து மூக்கு உடைந்து செல்கின்றனர் சித்ரா மற்றும் அன்பு. பிறகு வேலை செய்யும் இடத்தில இருக்கும் கஷ்டங்களை தன்னுடைய கணவன் கலையிடம் சொல்லி புலம்புகிறாள் நந்தினி. அவனோ இவ்ளோ கஷ்டப்பட்டு எதுக்கு வேலைக்கு போகணும், பேசாம விற்று நந்தினி என்று சொல்கிறான். அப்படி நின்னுட்டா மளிகைக்கு காசு கேட்டு வந்தா என்ன பண்றது என்று சொல்கிறாள். தயவு செஞ்சி நீங்க அட்வைஸ் பண்ணாதீங்க, உங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டேன்ல அதுக்கு நான் அனுபவிச்சு தான் ஆகணும் என்று திட்டிட்டு தூங்குகிறாள்.

இங்க அபியின் அம்மா மற்றும் பெரிம்மா போன் பண்ணி இது ஆடி மாசம் அதுனால கொஞ்சம் பாத்து இருங்கன்னு நியாபகம் படுத்துறங்க. உடன் அபி இதனை வைத்து வெற்றியை பயங்கரமாக வெறுப்பேத்துகிறாள். பிறகு இருவரும் ஓடி பிடித்து விளையாடிட்டு இருக்கிறது பாத்து கடுப்பாகும் கமலா அரங்கநாதன். அடுத்த நாள் காலை கமலா ரொம்ப முடியாமல் துணி துவைக்க எழுந்திருக்கும் பொழுது அபி உதவுகிறாள். அதனை விரும்பாமல் அபியை கண்ட மேனிக்கு திட்டி விரட்டுகிறாள் கமலா, மன வேதனையுடன் திரும்பி செல்கிறாள் அபி.

அடுத்து வனத்திற்கும் ப்ரோமோ படி, நந்தினி வேலை செய்யும் ஆபீஸில் நடக்கும் அக்கருமங்களை அபியிடம் சொல்லி புலம்புகிறாள். இது சட்டப் படி குற்றம் என்று சொல்லும் அபி, அதனை சரி செய்ய நந்தினியுடன் வேலைக்கு செல்ல முடிவெடுக்கிறாள். அடுத்து நடக்கப்போகும் அதிரடியான திருப்பங்களை தெரிந்துகொள்ள அடுத்த வாரம் வரை காத்திருங்கள்.   

Thendral vanthu ennai thodum serial, thendral vanthu ennai thodum today episode, thendral vanthu ennai thodum episodes, vijay tv latest promo, thendral vanthu ennai thodum latest promo.

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்