Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஒரே மேடையில் தனுஷ் மற்றும் அனிருத்...நாளை திருச்சிற்றம்பலம் இசைவெளியீட்டு விழா..!

madhankumar July 29, 2022 & 17:00 [IST]
ஒரே மேடையில் தனுஷ் மற்றும் அனிருத்...நாளை திருச்சிற்றம்பலம் இசைவெளியீட்டு விழா..!Representative Image.

நடிகர் தனுஷ் கிரிஷ் எவான்ஸ் மற்றும் ரியல் காஸ்லிங் ஆகியோர் நடிப்பில் ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில் கடந்த ஜூலை 22 அன்று நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான படம் "தி கிரே மேன்".  இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்குனர் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் "திருச்சிற்றம்பலம்" படத்தில் நடித்துமுடித்துள்ளார்.

இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கர்ணன் படத்தை அடுத்து திரையரங்கில் வெளியாகும் படம் என்பதால் தனுஷ் ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர். மேலும் கூடுதல் கொண்டாட்டமாக கடந்த 7 வருடங்களுக்கு பிறகு தனுஷ் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

தனுஷ் மற்றும் அனிருத் இசையில் இதுவரை வெளியான ஆல்பங்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட் என்பதால் இத்தனையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தில் இருந்து "தாய் கிழவி" "மேகம் கருக்காத" "லைஃப் பழம்" ஆகிய மூன்று பாடல்கள் வெளியாகியியிருந்தன.

இந்நிலையில் நாளை "திருச்சிற்றம்பலம்" படத்தின் இசை வெளியிட்டு விழா நாளை (ஜூலை 30) ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் வைத்து நடைபெற இருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் தெரிவித்துளளது. மேலும் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து தெரிவித்துள்ளார், மேலும் இசை வெளியிட்டு விழா குறித்த அறிவிப்பு வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான "அண்ணாத்தே" "பீஸ்ட்" "எதற்கும் துணிந்தவன்" ஆகிய எந்த படத்திற்கும் இசை வெளியிட்டு விழா வைக்கவில்லை ஆணை இந்த அப்படத்திற்கு இசைவெளியீட்டு விழா வைப்பது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்