Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

துணிவு டிரைலர் வெளியாகும் தேதி இதுதான்! | thunivu trailer release date

UDHAYA KUMAR Updated:
துணிவு டிரைலர் வெளியாகும் தேதி இதுதான்! | thunivu trailer release dateRepresentative Image.

ஹெச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிக்கும் மூன்றாவது படம் துணிவு.  அஜித்குமார், மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். 

வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு விஜய்யின் வாரிசு, அஜித்தும் துணிவு ஆகிய படங்கள் வெளியாவதால் இந்த போட்டி மிகவும் சுவாரஸ்யமானதாக மாறியுள்ளது. இரு தரப்பினரும் மாறி மாறி அடுத்தடுத்து அப்டேட்களை வழங்கி ரசிகர்கலை குஷிப்படுத்தி வருகின்றனர். வாரிசு படத்தின் முதல் இரு பாடல்கள் மிக வேகமாக வெளியிடப்பட்டது. முதல் பாடல் ரஞ்சிதமே வெளியாகி மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால் துணிவு தரப்பிலிருந்து பாடல் குறித்த அப்டேட் எதுவும் வரவில்லை. தீ தளபதி பாடல் வெளியானதும், துணிவு டீம் ரேஸில் கலந்துகொண்டது. 

அஜித்குமார் நடிப்பில் முதல் பாடலான சில்லா சில்லா இரு வாரங்களுக்கு முன் வெளியானது. அது மிகப் பெரிய அளவில் ரசிகர்களால் பேசப்பட்டது. முன்னதாகவே லீக் ஆன நிலையிலும், இந்த பாடலை நன்கு வரவேற்று சாதனை பட்டியலில் இடம்பெறச் செய்தனர் ரசிகர்கள். இதனைத் தொடர்ந்து காசேதான் கடவுளடா பாடலையும் லீக் செய்தனர். அதே நேரம் இந்த பாடல் முதல் பாடல் அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. 

இரண்டு பாடல்கள் வெளியான நிலையில், நேற்று வாரிசு திரைப்படத்தின் மூன்றாவது பாடலான சோல் ஆஃப் வாரிசு பாடல் வெளியாகி மீண்டும் போட்டியை உறுதிப் படுத்த, துணிவு படத்தின் அடுத்த பாடலுக்கான அப்டேட்டை இன்று காலையிலேயே கூறிவிட்டார் ஜிப்ரான். 

ஜிப்ரான் இசையில் இப்போது வெளியாகவுள்ள பாடல் வேற லெவலுக்கு இருக்கப்போகிறது. ஜிப்ரான் இசையில், பாடகர் சபீர் சுல்தான் பாடி அசத்தியிருக்கும் இந்த பாடல் கடந்த ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியிட்டனர்.

துணிவு படத்திலிருந்து டீசர் ஒன்றை வரும் கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியிடலாம் என யோசித்திருந்தார்களாம். ஆனால் அஜித்திடம் இதுகுறித்து பேசும்போது அவர் டிரெய்லரை நேரடியாக வெளியிட்டால் என்ன என கேட்க, அப்படியே ஆகட்டும் என இயக்குநரும், தயாரிப்பு தரப்பும் முடிவு செய்திருப்பதாக தகவல். இந்நிலையில் புத்தாண்டு தினத்தில் டிரைலர் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது  சரியாக நள்ளிரவு 12.01 மணிக்கு டிரைலர் வெளியிடப்படுகிறதாம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்