Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

த்ரிஷாவுக்கு லிப்லாக்.. அவரே பகிர்ந்த வீடியோ!!

Sekar November 20, 2022 & 16:47 [IST]
த்ரிஷாவுக்கு லிப்லாக்.. அவரே பகிர்ந்த வீடியோ!!Representative Image.

நடிகை த்ரிஷாவுடன் குட்டி சிறுவன் லிப்லாக் கொடுக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

த்ரிஷா கடைசியாக நடித்த பொன்னியின் செல்வன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதில் குந்தவையின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், த்ரிஷா அடுத்து தளபதி விஜயின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகும் படத்தில் கமிட் ஆகி உள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. எனினும் தற்போதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்நிலையில், நடிகை த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கு சிறுவன் ஒருவன் லிப்லாக் கொடுக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது அம்மா தூக்கி வைத்துக் கொண்டிருந்த நிலையில், வாண்டு சிறுவன் த்ரிஷாவின் போஸ்டரை பார்த்து ரசித்ததோடு, போஸ்டரில் உள்ள த்ரிஷாவின் படத்திற்கு முத்தம் கொடுத்துள்ளார்.

சிறுவன் சரியாக த்ரிஷாவின் உதட்டிலே முத்தம் கொடுத்ததால், இதை பார்த்த நெட்டிசன்கள் மொளச்சு மூணு இலை விடுல, அதுக்குள்ள த்ரிஷாவோடு லிப்லாக் கேக்குதா என ஜாலியாக பதிவிட்டு வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்