Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பரிதாபங்கள் கோபி சொன்ன ஹேப்பி நியூஸ்... குவியும் வாழ்த்து!

Chandrasekaran Updated:
பரிதாபங்கள் கோபி சொன்ன ஹேப்பி நியூஸ்... குவியும் வாழ்த்து!Representative Image.

சென்னை: பரிதாபங்கள் யூட்யூப் சேனலின் ஸ்டாரான கோபி தந்தையாகியிருக்கிறார். உலகம் தற்போது ஸ்மார்ட் ஃபோனுக்குள் அடங்கியிருக்கிறது. அனைத்து தளங்களிலும் டிஜிட்டல் வந்துவிட்டதால் பலரும் அதனை பயன்படுத்தி தங்களுக்கு விருப்பமானவைகளை செய்துவருகின்றனர். அதில் அதிகம் பேர் செய்வது யூட்யூப் சேனல் ஆரம்பிப்பது. பல யூட்யூப் சேனல்கள் இருந்தாலும் தனித்துவமிக்க யூட்யூப் சேனல்களே நிலைக்கின்றன.  அப்படிப்பட்ட ஒரு யூட்யூப் சேனல்தான் பரிதாபங்கள்.

பரிதாபங்கள் கோபி சொன்ன ஹேப்பி நியூஸ்... குவியும் வாழ்த்து!Representative Image

கோபி, சுதாகர்

திருச்சி மற்றும் பெரம்பலூரை பூர்வீகமாகக் கொண்ட கோபியும், சுதாகரும் திருச்சியில் கல்லூரியில் படிக்கும்போது நண்பர்கள் ஆனவர்கள். அதன் பிறகு காமெடி மீது இருவருக்கும் ஆர்வம் ஏற்பட விஜய் டிவி நடத்திய கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியி போட்டியாளர்களாக பங்கேற்றனர். ஆனால் அப்போது நிகழ்ச்சி நடுவர்களை அவர்கள் செய்த காமெடி கான்செப்ட் இம்ப்ரெஸ் செய்யாததால் நிகழ்ச்சிக்கு தேர்வாகாமல் நடையை கட்டினர்.

மெட்ராஸ் சென்ட்ரல்

இதனையடுத்து மெட்ராஸ் சென்ட்ரல் என்ற யூட்யூப் சேனலில் இணைந்த அவர்கள் தங்களது காமெடி கான்செப்ட்டாலும், தங்களது நடிப்பாலும் பட்டித்தொட்டியெங்கும் பேமஸ் ஆகினர். குறிப்பாக சீமான், வைகோ, ஸ்டாலின் உள்ளிட்டோரை இமிட்டேட் செய்து அவர்கள் போட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்டாகின. மேலும் அந்த சேனலுக்காக ஹாஃப் பாயில் என்ற சீரிஸிலும் நடித்தனர். அதுவும் ஓரளவு டீசண்ட்டான வரவேற்பைப்பெற்றது.

பரிதாபங்கள் கோபி சொன்ன ஹேப்பி நியூஸ்... குவியும் வாழ்த்து!Representative Image

பரிதாபங்கள்

ஒருகட்டத்தில் மெட்ராஸ் சென்ட்ரலிலிருந்து வெளியே வந்தவர்கள் பரிதாபங்கள் என்று தனியாக யூட்யூப் சேனலை ஆரம்பித்து வீடியோக்களை போட ஆரம்பித்தனர். மெட்ராஸ் சென்ட்ரலில் இருந்ததைவிட பரிதாபங்களில் கூடுதல் எஃபர்ட் போட்டு அவர்கள் அப்லோட் செய்த வீடியோக்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. குறிப்பாக வட இந்தியர்களை பற்றி அவர்கள் போட்ட வீடியோ அனைவரையும் சென்று சேர்ந்தது. இருப்பினும் பிழைப்புக்காக வருபவர்களை கோபியும் சுதாகரும் கிண்டல் செய்கிறார்கள் என்ற விமர்சனத்தையும் சந்தித்தது.

திருமணம்

இந்தச் சூழலில் பரிதாபங்கள் சுதாகருக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்தது. அதேபோல் அவரது நிழலாக விளங்கும் கோபிக்கும் அடுத்ததாக திருமணம் முடிந்த சூழலில் அதே சேனலில் தோன்றும் டிராவிட்டுக்கு சில வாரங்களுக்கு முன்புதான் திருமணம் முடிந்தது.  பேச்சிலராக இருந்தவர்கள் அடுத்தடுத்து திருமண வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்திருக்கின்றனர்.

பரிதாபங்கள் கோபி சொன்ன ஹேப்பி நியூஸ்... குவியும் வாழ்த்து!Representative Image

நான் தகப்பன் ஆனேன்..!

இந்நிலையில் பரிதாபங்கள் கோபி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தகப்பன் ஆனேன். அழகிய மகள் பிறந்துள்ளாள் என தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருக்கிறார். இதனையடுத்து அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தை தெரிவித்துவருகின்றனர். கோபிக்கு குழந்தை பிறந்ததை அடுத்து எங்கள் தலைவன் சுதாகரும் விரைவில் தகப்பன் ஆக வாழ்த்துகள் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்