Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உதயநிதி ஸ்டாலினின் அடுத்த பட தலைப்பு இதுவா? ஏதோ திட்டத்தோடதா வச்சிருக்காங்க

Udhaya Kumar July 05, 2022 & 19:09 [IST]
உதயநிதி ஸ்டாலினின் அடுத்த பட தலைப்பு இதுவா? ஏதோ திட்டத்தோடதா வச்சிருக்காங்கRepresentative Image.

சினிமா, அரசியல் என இரண்டிலும் பங்காற்றி வரும் உதய நிதி ஸ்டாலின் இப்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷும், முக்கிய வேடங்களில் பஹத்பாசில், வடிவேலு, அழகம்பெருமாள் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். 

இந்த திரைப்படத்துக்கு முன்னரே உதயநிதி  மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்துக்கு கழக தலைவர் என்று பெயர் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இந்த படத்தின் அப்டேட், தலைப்புடன் பர்ஸ்ட் லுக்காக வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. 

முன்னதாக உதயநிதி ஸ்டாலின் ஆர்ட்டிக்கிள் 15 படத்தின் ரீமேக்கில் நடித்திருந்தார். அருண்ராஜா காமராஜ் இயக்கிய இந்த படத்துக்கு கருணாநிதி அவர்களின் புகழ் பெற்ற தலைப்பான நெஞ்சுக்கு நீதி எனும் பெயரிடப்பட்டிருந்தது. இந்த படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு உதயநிதி இன்னும் இரண்டு படங்களில் மட்டுமே நடித்துவிட்டு அரசியலில் முழுமையாக குதிக்க இருப்பதாக கூறப்பட்டது. 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன், மகிழ்திருமேனி இயக்கத்தில் கழகத் தலைவன் உள்ளிட்ட படங்களை நிறைவு செய்துவிட்டு நிரந்த கட்சித் துணைத் தலைவராக இருப்பாரோ என அவரது ரசிகர்கள் கூறுகின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்