Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வாத்தி பர்ஸ்ட் லுக்... விவேகமான டீச்சராக தனுஷ்..!

UDHAYAKUMAR July 27, 2022 & 14:36 [IST]
வாத்தி பர்ஸ்ட் லுக்... விவேகமான டீச்சராக தனுஷ்..!Representative Image.

நடிகர் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு ஜூலை 28ம் தேதி பல அப்டேட்கள் அடுத்தடுத்து வரவுள்ளன. அதில் முதல் அப்டேட்டாக இன்று வாத்தி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. 

Image

தனுஷ் முதல் முறையாக தெலுங்கு இயக்குநர் படத்தில் நடிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு இருமொழிகளிலும் வெளியாகவுள்ள திரைப்படம் வாத்தி. இதன் டீஸர் நாளை வெளியாகவுள்ளது என்பதை அறிவிக்கும் வகையில் பர்ஸ்ட் லுக்குடன் சேர்த்து டீசர் அறிவிப்பும் வெளியாகியுள்ளது. 

Image

சித்தாரா எண்டர்டெய்ன்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பின் நாக வம்சி, சாய் சௌசன்யா ஆகியோர் இணைந்து தயாரித்து வரும் வாத்தி படத்தை வெங்கி அட்லூரி இயக்குகிறார். இவர் தெலுங்கில் மிகப் பெரிய வெற்றி பெற்ற ரங்தே படத்தை இயக்கியவர்.  

வாத்தி படத்தில் தனுஷ் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இவர்களுடன் சமுத்திர கனி, தோட்டப்பள்ளி மது, நர ஸ்ரீனிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, ஷாரா, ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்டை ராஜேந்திரன், ஹரீஷ் பெராடி, பிரவீணா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.  இந்த படத்துக்கு இசை ஜி வி பிரகாஷ். 

Image

மேசையில் இரவு ஒளிவிளக்கை வைத்துக்கொண்டு எதையோ தீவிரமாக ஆலோசித்து தேடி படிக்கும் தனுஷின் லுக் நிச்சயமாக இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.  

தனுஷ் பிறந்தநாளான ஜூலை 28ம் தேதி நாளை மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது. கல்வி அமைப்பை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த திரைப்படம் நிச்சயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். படம் அக்டோபரில் வெளியாகும் என கூறப்படுகிறது. 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்