Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சுகத்தை எழுப்பிய விரலை வாழ்த்திய கவிஞர் - ஹேப்பி பர்த்டே வைரமுத்து

Udhaya Kumar July 13, 2022 & 11:53 [IST]
சுகத்தை எழுப்பிய விரலை வாழ்த்திய கவிஞர் - ஹேப்பி பர்த்டே வைரமுத்து Representative Image.

கண்ணு, காது, மூக்கு, உதடு, தலை, கை, கால், பாதம் என எதை எதையோ வாழ்த்திய கவிஞர்களைப் பார்த்திருக்கிறோம். நம்முடைய கவிஞர் விரல்களை வாழ்த்தியிருக்கிறார். ஏன் வாருங்கள் தெரிந்து கொள்வோம். இன்று அவரின் பிறந்தநாள். விரல் போலவே நம் இன்பக் கதவுகளை தன் விரலால் (பேனா பிடித்து) எழுப்பிய கவிஞர் நீடுழி வாழ வாழ்த்துவோம். 

அச்சச்சோ புன்னகை எனும் பாடல் ஷாஜகான் படத்தில் இடம்பெற்றது.  இந்த பாடலில்   சில இடங்களில் கவிஞர் தனது கற்பனைகளை இயல்புகளுடன் கலந்து அடித்து கவிதையாக்கியுள்ளார். 

மணிஷர்மா இசையில், வைரமுத்து வரிகளில் உதித் நாராயணன், கவிதா கிருஷ்ணமூர்த்தி பாடிய இந்த பாடலை கேட்போம்.. 

அச்சச்சோ புன்னகை
ஆள்தின்னும் புன்னகை
கைகுட்டையில் நான் பிடித்து
கையோடு மறைத்துக்கொண்டேன்

சிரிக்கும்போது அதை கைக்குட்டையால் மறைத்துக் கொள்ளும் பெண்ணைப் பற்றி பாடுகிறார். அவளது சிரிப்பை கைக்குட்டையில் பிடித்து கையோடு மறைத்துவிட்டாளாம். 

அத்திப்பூவைப் போன அரிதான நிகழ்வான அந்த புன்னகையை முந்தானை ஏந்தி சிந்திவிடாமல் பிடித்துக் கொண்டாளாம். 

உன் புன்னகை ஹோ ஹோ
எனும் சாவியால் ஹோ ஹோ
உன் புன்னகை
எனும் சாவியால்
என் காதல் திறந்துகொண்டேன்

நீ சிரிச்சிருக்க.. நீ சிரிச்சிட்டா என்ன புடிச்சிருக்கு. அப்ப நீ என்ன காதலிக்குறதா அர்த்தம்தான. நீ என்ன காதலிக்குற விசயத்த உன் மனச திறந்து எனக்கு காட்டுற சாவியா  அந்த புன்னகையை நினைக்குறேன். 

காதலர்கள் ஒருவரையொருவர் நினைக்கிறார்கள். காதலில் தனிமையில் திளைக்கிறார்கள். மகிழ்ச்சி கொள்கிறார்கள். பெண் நினைக்கிறாள்.. 

பெண்ணுக்குள் இத்தனை சுகமா
அந்த பிரம்மனின் திறம் வாழ்க
எனக்குள் தூங்கிய சுகத்தை
இன்று எழுப்பிய விரல் வாழ்க
என விரல்களை வாழ்த்தும் பெண்ணின் குணத்தை எழுதிகிறார் கவிஞர். 

இதே பாடலில், வரும் அடுத்தடுத்த வரிகளை பாருங்கள். 

வெட்கத்தை உன் முத்தத்தால்
நீ சலவை செய்துவிடு
பெண் தேகம் ஒரு பேரேடு
உன் பேரை எழுதிவிடு

இரு உதடுகள் ஹோ ஹோ
என் எழுதுகோல் ஹோ ஹோ
இரு உதடுகள் என் எழுதுகோல்
வா அன்பே வளைந்துகொடு

அருகில் வந்து முத்தமிட்டு என் வெட்கத்தை போகச் செய், என்னை விட பெரிய ஏடு எதுவும் இல்லை வந்து உன் பெயரை எழுதிவிடு. இரு உதடுகளால் எழுதவா இல்லை பேனாவால் எழுதவா என கவிஞர் கேட்கிறார்.. 

இதேபோல பல பாடல்கள் எழுதியிருக்கிறார் வைரமுத்து. உங்களுக்கு தெரிந்ததை கமெண்ட் செய்யுங்கள் பார்ப்போம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்