Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மீண்டும் மோதும் வாரிசு - துணிவு.. இந்த தடவை ஆட்டம் வேற!

UDHAYA KUMAR Updated:
மீண்டும் மோதும் வாரிசு - துணிவு.. இந்த தடவை ஆட்டம் வேற!Representative Image.

திரையரங்குகளில் வாரிசு மற்றும் துணிவு ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.  துணிவு எதிர்பார்த்ததை விட நல்ல விமர்சனங்களையும் வாரிசு கொஞ்சம் கலவையான விமர்சனங்களையும் பெற்றாலும், வசூல் ரீதியில் வாரிசு படமே முன்னிலை வகிக்கிறது. 

விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படமும் சரி 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் சாதனை செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதில் வாரிசு விநியோகஸ்தர் ஒரு படி மேலே போய் 7 நாட்களில் 210 கோடி என 8வது நாளிலேயே அறிவிப்பு வெளியிட்டு ரசிகர்களிடையே கலாய் வாங்கினார். 

இந்நிலையில், வரும் பிப்ரவரி 10ம் தேதி ஓடிடி தளங்களில் ரிலீசாகிறது வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள்.  விஜய் நடிப்பில் வம்சி இயக்கியுள்ள வாரிசு திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் ப்ரைம் வீடியோஸ் நிறுவனம் கைப்பற்றியிருந்தது.  அ.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த துணிவு திரைப்படம் நெட்பிஃளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது. 

திரையரங்குகளில் ஒரே நாளில் வெளியான இவ்விரு படங்களும் ரசிகர்களை குதூகலப்படுத்தின. இந்நிலையில், ஓடிடி ரிலீஸூம் கலை கட்டும் என கூறப்படுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்