Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
114.49sensex(0.16%)
நிஃப்டி22,402.40
34.40sensex(0.15%)
USD
81.57
Exclusive

வாரிசு முதல் நாளில் எத்தனை கோடி தெரியுமா?

UDHAYA KUMAR Updated:
வாரிசு முதல் நாளில் எத்தனை கோடி தெரியுமா?Representative Image.

வாரிசு திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் தெரியவந்துள்ளது. அதன்படி உலக அளவில் 25+ கோடி ரூபாயை வசூலித்துள்ளது விஜய் நடிப்பில் வெளியான வாரிசு. 

வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படம் பொங்கல் திருநாளை முன்னிட்டு நேற்று வெளியானது. மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படத்தின் முதல் நாள் வசூல் பெரிய சாதனை படைக்கும் என நம்பப்பட்டது. ஆனால் கலவையான விமர்சனம், ஒரே நாளில் துணிவு படமும் வெளியானதன் காரணமாக 25+ கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. 

விஜய், ராஷ்மிகா, சரத்குமார், ஜெயசுதா, பிரபு, பிரகாஷ் ராஜ் என நட்சத்திர பட்டாளமே நடித்து எமோசனல் படமாக வந்துள்ள வாரிசுவுக்கு சராசரியான வரவேற்பே இருக்கிறது. 

வாரிசு, துணிவு ஒரே நாளில் வெளியானதன் காரணமாக இரு தரப்பு ரசிகர்களும் ஆங்காங்கே மிகப் பெரிய அளவில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜூ இந்த படத்தை பிரம்மாண்டமாக தயார் செய்ய திட்டமிட்டார். ஆனால் படத்தின் கதைக்கு அவ்வளவு பிரம்மாண்டம் தேவையே இல்லை என்கிறார்கள். அதை கதை உருவாக்கம், திரைக்கதை உள்ளிட்டவற்றில் ஈடுபடுத்தியிருந்தால் நிச்சயம் வெற்றிப் படமாக அமைந்திருக்கும். 

காமெடி, ஆக்ஷன், செண்டிமென்ட் என கலந்து கட்டி அடிக்க திட்டமிட்ட படக்குழு, அதை ரசிகர்களுடன் கணெக்ட் செய்யும் இடத்தில் கோட்டை விட்டிருக்கிறது. 

வாரிசு முதல் நாளில் எத்தனை கோடி தெரியுமா?Representative Image

முதல்நாள் வசூல் நிலவரம்

கர்நாடக மாநிலத்தில் இந்த படம் முதல் நாளிலேயே 5 கோடி வசூல் செய்திருக்கிறது. அதேபோல் கேரளாவில் இந்த படம் 3.5 கோடி ரூபாய் வசூலைப் பெற்றுள்ளது.  தமிழகத்தைப் பொறுத்தவரையில் நேற்று ஒரு நாளில் மட்டும்  17 கோடி ரூபாய் வசூல் இருந்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக உலக அளவில் 26.5 கோடி ரூபாய் அளவுக்கு வசூலிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஆனால் இந்த படம் நிச்சயம் வெற்றிப்படமாக அமையும் என கூறப்படுகிறது. படங்களைப் பொறுத்தவரையில் தயாரிப்பாளருக்கு கணிசமான லாபம் கிடைத்துள்ளது. ஆனால் திரையரங்கு உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும்தான் சிக்கலில் மாட்ட வாய்ப்பிருக்கிறது. ஆனாலும் பொங்கல் தாண்டி ஒரு வாரம் ஓடிவிட்டாலே போட்ட முதலுக்கு மிஞ்சிய லாபம் கிடைத்துவிடும் என கூறுகிறார்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்