Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வடிவேலு ரசிகர்களே தயாரா..? - நாளை வெளியாகிறது மாரி செல்வராஜின் மாமன்னன் ட்ரெய்லர்!

Aruvi Updated:
வடிவேலு ரசிகர்களே தயாரா..? - நாளை வெளியாகிறது மாரி செல்வராஜின் மாமன்னன் ட்ரெய்லர்!Representative Image.

சென்னை: வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாமன்னன் படத்தில் ட்ரெய்லர் நாளை வெளியாகவிருக்கிறது.

இந்திய அளவில் முக்கியமான இயக்குநர் என்று பெயர் எடுத்த ராமிடம் அலுவலக உதவியாளராக இருந்து பின்னர் உதவி இயக்குநராக பல வருடங்கள் இருந்துவிட்டு பரியேறும் பெருமள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் மாரி செல்வராஜ். இவர் இயக்குநராக மட்டுமின்றி மறக்கவே நினைக்கிறேன், தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் உள்ளிட்ட புத்தகங்களையும் எழுதியிருக்கிறார்.

வடிவேலு ரசிகர்களே தயாரா..? - நாளை வெளியாகிறது மாரி செல்வராஜின் மாமன்னன் ட்ரெய்லர்!Representative Image

பாராட்டு மழை

கதிர், யோகி பாபு, கயல் ஆனந்தி, மாரிமுத்து உள்ளிட்டோர் நடித்திருந்த பரியேறும் பெருமாள் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியானது. முதல் படத்திலேயே சாதிய அட்டூழியங்களை தோலுரித்து காட்டும் வகையில் காட்சிகளை வைத்து கவனம் ஈர்த்தார் மாரி. பரியேறும் பெருமாளை பார்க்கும்போது இது முதல் படத்தை இயக்கிய இயக்குநர் போல் தெரியவில்லை என்றே பலரும் கூறினர். அந்த அளவுக்கு தன்னை ஒரு தேர்ந்த படைப்பாளியாக பிரகடனப்படுத்திக்கொண்டார் மாரி செல்வராஜ்.

வடிவேலு ரசிகர்களே தயாரா..? - நாளை வெளியாகிறது மாரி செல்வராஜின் மாமன்னன் ட்ரெய்லர்!Representative Image

தனுஷுடன் கூட்டணி

முதல் படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். கொடியங்குளத்தில் எளிய மக்கள் மீது அதிகாரவர்க்கத்தினர் நடத்திய கொடூர அராஜகத்தை மையமாக வைத்து உருவாகியிருந்த கர்ணன் வரவேற்பைப் பெற்றாலும் பரியேறும் பெருமாளில் இருந்தது ஏதோ ஒன்று இந்தப் படத்தில் இல்லை என்ற விமர்சனத்தையும் சந்தித்தது. அப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்திருந்தார். இருப்பினும் இரண்டு படங்களிலேயே மாரி செல்வராஜ் முன்னணி இயக்குநராகிவிட்டார்.

வடிவேலு ரசிகர்களே தயாரா..? - நாளை வெளியாகிறது மாரி செல்வராஜின் மாமன்னன் ட்ரெய்லர்!Representative Image

மாமன்னன் மாரி செல்வராஜ்

இப்படிப்பட்ட சூழலில் உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் படத்தை இயக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ். இதில் வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இதில் வடிவேலுவுக்கு முக்கியமான கதாபாத்திரம் என்றும், வழக்கமான பாணியில் வடிவேலு இதில் தோன்றமாட்டார் என்றும் இயக்குநர் தொடர்ந்து கூறிவருகிறார்.

வடிவேலு ரசிகர்களே தயாரா..? - நாளை வெளியாகிறது மாரி செல்வராஜின் மாமன்னன் ட்ரெய்லர்!Representative Image

ஆடியோ வெளியீட்டு விழா

படத்தின் ஆடியோ வெளியீட்டு கடந்த வாரம் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. அதில் படக்குழுவினர் தவிர்த்து கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அந்த விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் மேடையில் வாசிக்க வடிவேலு பாடல் பாடினார். இதற்கிடையே படத்தின் ஐந்து சிங்கிள்கள் வெளியாகி ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளன.

ட்ரெய்லர்

இந்நிலையில் மாமன்னன் படத்தின் ட்ரெய்லர் குறித்த அப்டேட் வெளியாகியிருக்கிறது. அதன்படி படத்தின் ட்ரெய்லரானது நாளை வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. படம் இந்த மாத இறுதியில் வெளியாகிறது. வடிவேலு தனது இரண்டாவது இன்னிங்ஸில் முதல் படமான நாய் சேகர் ரிட்டர்ன்ஸில் சொதப்பியிருந்தார். மாமன்னனில் அவர் எப்படி நடித்திருக்கிறார் என்பதை ட்ரெய்லரில் பார்க்க அவரது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்