Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வாரிசு பிரிமியர் ஷோ... வேற லெவல் ஃபேமிலி எண்டர்டெய்ன்மெண்ட்!

UDHAYA KUMAR Updated:
 வாரிசு  பிரிமியர் ஷோ... வேற லெவல் ஃபேமிலி எண்டர்டெய்ன்மெண்ட்!Representative Image.

வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் வெளியாகியுள்ள வாரிசு திரைப்படத்தின் பிரிமியர் ஷோ இன்று திரையிடப்பட்டது. இதில் கலந்துகொண்டு படம் பார்த்த அனைத்து விமர்சகர்களும் படத்தை ரசித்து பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

விஜய் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் வாரிசு. இந்த படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷ்யாம், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளங்களுடன் வெளியாகியுள்ள இந்த படத்தின் வசனங்களும் காட்சிகளும் தெலுங்கு படத்தை நினைவு ஊட்டினாலும், படம் போரிங் இல்லை என்கிறார்கள். 

படத்தின் அத்தனை காட்சிகளும் கோர்வையாக இருப்பதாகவும் ஆனால் சில பாடல்கள் படத்தின் கதைக்கு வேகத் தடையாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

தமன் இசை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை எனவும், ஆனால் சென்டிமெண்ட் காட்சிகளில் கொஞ்சம் நம்மை உருக வைத்திருக்கிறார் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர் பிரிமியரில் படம் பார்த்தவர்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்