Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

1996லேயே கோடிக் கணக்கில் வசூல் அள்ளிய கமல்ஹாசன்!

UDHAYA KUMAR Updated:
1996லேயே கோடிக் கணக்கில் வசூல் அள்ளிய கமல்ஹாசன்!Representative Image.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி 1996ம் ஆண்டிலேயே இந்தியன் திரைப்படம் கோடிக்கணக்கில் வசூல் அள்ளியிருக்கிறது. இன்றைய நாள் கணக்கில் அது 300 - 350 கோடிக்கும் அதிகமான வசூலாக இருக்கும். 

லஞ்சம், ஊழலுக்கு எதிரான படமாக வெளிவந்து இந்தியா முழுமைக்கும் கொண்டாடப்பட்ட படம் இந்தியன். இதில் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக சுகன்யா, மனிஷா கொய்ராலா, ஊர்மிளா மட்னோகர், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.ஜீவா ஒளிப்பதிவு செய்ய, லெனின், விடி விஜயன் படக்கலவையில் படம் பிரமாதமாக வந்திருந்தது. 

ஏ ஆர் ரஹ்மான் இசையில் இந்தியன் படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் இன்றளவும் பாராட்டத்தக்க வகையில் இருக்கிறது. படம் வெளியான நாள் தொட்டு படத்தை சிலாகித்து பேசி, ஷங்கரை கொண்டாடித் தீர்த்தனர். இப்போது லோகேஷ் கனகராஜூக்கு இருந்த கிரேஸ் அப்போது ஷங்கருக்கு இருந்தது. 

ஏற்கனவே ஜெண்டில்மேன், காதலன் படங்கள் மூலம் தன்னை நிரூபித்திருந்த ஷங்கர், இந்தியன் படம் மூலம் இந்திய அளவில் பிரபலமான இயக்குநராக மாறினார். மூன்றாவது படத்திலேயே அவருக்கு வாய்ப்பு கொடுத்தார் கமல்ஹாசன். 

படம் வெளியாகி பட்டி தொட்டியெல்லாம் பாசிடிவ் ரிவியூ கிடைக்க, அப்போதே உலகம் முழுக்க 61 கோடி ரூபாய் வசூலை அள்ளியிருந்தது இந்தியன் படம். இந்தியாவில் மட்டும் 53.7 கோடி ரூபாயும், வெளிநாட்டில் 27.76 கோடி ரூபாயும் வசூல் மழையாக பொழிந்தது. தமிழ்நாட்டில் மட்டுமே 20 கோடிக்கும் அதிகமான வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்