Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அட்டகாசமான செகண்ட் லுக்.. சார்மிங் தளபதி... வேற லெவல் போங்க!

UDHAYA KUMAR June 22, 2022 & 12:25 [IST]
அட்டகாசமான செகண்ட் லுக்.. சார்மிங் தளபதி... வேற லெவல் போங்க!Representative Image.

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று மாலை தளபதி 66 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதனை விஜய் ரசிகர்கள் ரசித்தாலும், பெரிய அளவில் மற்ற ரசிகர்களுக்கு பிடித்தமாதிரி இல்லை. இதனால் மீண்டும் செகண்ட் லுக் இன்று காலை 11.44 மணிக்கு வெளியாகும் என கூறப்பட்டது. 

அதன்படி காலை 11.44 மணிக்கு சரியாக வாரிசு திரைப்படத்தின் செகண்ட் லுக் வெளியானது.  இது படத்தில் இடம்பெற்றுள்ள காட்சியிலிருந்து எடுக்கப்பட்ட ஸ்டில் போல தோன்றுகிறது. 

முன்னதாக ராகவா லாரன்ஸ், சிவகார்த்திகேயன், அனிருத் உள்ளிட்டோர் விஜய் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

கதைப்படி வெளிநாட்டிலிருந்து வரும் கதாநாயகன் உள்ளூர் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பதாக அமைந்துள்ளது என கூறப்படுகிறது. எது எப்படியோ முதல் பார்வையை சுமாராக கொடுத்துவிட்டு இரண்டாவது ஸ்டில் சூப்பராக அமைந்துள்ளதால், படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு கூடியுள்ளது. 

மகேஷ்பாபு நடித்து வம்சி இயக்கிய மகரிஷி படத்தின் தமிழ் வெர்சனோ, அதன் இரண்டாம் பாகமோ என பலரும் எதிர்பார்ப்பைக் கிளப்பி வருகின்றனர். 

Image


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்