Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வெந்து தணிந்தது காடு Vs சினம் - சிம்புடன் மோதும் அருண்விஜய்...!

UDHAYAKUMAR August 24, 2022 & 14:00 [IST]
வெந்து தணிந்தது காடு Vs சினம் - சிம்புடன் மோதும் அருண்விஜய்...!Representative Image.

நீண்ட நாட்களுக்குப் பிறகு கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு. ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பில், இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 15ம் தேதி ரிலீசாகவுள்ளது. இதற்கான அறிவிப்பை தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ளது. இந்த படத்திலிருந்து 3 பாடல்கள் இதுவரை வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 2ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த விழாவில் உலகநாயகன் கலந்து கொள்வார் எனவும் கூறப்படுகிறது. 

வெந்து தணிந்தது காடு வெளியான அடுத்த நாளே அருண்விஜய் நடிப்பில் சினம் திரைப்படம் வெளியாகவிருக்கிறது. ஜிஎன்ஆர் குமரவேலன் இயக்கத்தில் அருண்விஜய் ஜோடியாக பாலக் லால்வானி நடித்துள்ளார். இவர்களுடன் காளி வெங்கட், வெங்கடேஷ், மறுமலர்ச்சி பாரதி உள்பட பலரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படமும் பல நாட்களாக கிடப்பில் இருந்த படமாகும். கொரோனா காலத்தில் அருண்விஜய் நடிப்பில் எந்த படமும் வெளியாகாத நிலையில், ஒவ்வொரு படமாக ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. 

கௌதம் மேனன் படத்தை எதிர்த்து புதுமுக இயக்குநரின் தனது படத்தை வெளியிடும் தயாரிப்பாளருக்கு கொஞ்சம் தில் ஜாஸ்திதான் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அதிலும் சிம்பு ரசிகர்கள், கௌதம் மேனன் ரசிகர்களின் பலத்துடன் களம் காணும் வெந்து தணிந்தது காடு படம் ஜெயிக்குமா, இல்லை முழுக்க முழுக்க கதை பலத்துடன் களமிறங்கியுள்ள அருண் விஜய்யின் சினம் ஜெயிக்குமா இரண்டும் நல்ல வரவேற்பை பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் தெரிந்து கொள்ள வேண்டும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்