Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தளபதி விஜய்யுடன் அட்லீ, ஷாரூக்! ஜவான் படப்பிடிப்பா அது?

UDHAYAKUMAR August 24, 2022 & 19:00 [IST]
தளபதி விஜய்யுடன் அட்லீ, ஷாரூக்! ஜவான் படப்பிடிப்பா அது?Representative Image.

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்த அட்லீ, ராஜா ராணி படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பின்னர் விஜய்யுடன் அடுத்தடுத்து 3 திரைப்படங்களை இயக்கியவருக்கு, பாலிவுட்டிலிருந்து அழைப்பு வந்தது. 

பாலிவுட் பாட்ஷா ஷாருக் படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்ற அட்லீ, அதில் விஜய்யை நடிக்க வைப்பார் என பரவலாக பேச்சு அடிபட்டது. ஜவான் எனும் பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி, அனிருத் என தமிழ் பட்டாளமே பணிபுரிந்து வருகிறது.

ஜவான் திரைப்படத்தின் முக்கியமான காட்சி ஒன்றை படம்பிடிக்கும் வகையி்ல் தமிழகத்தில் முகாமிட்டுள்ளனர் படக்குழுவினர். 

இந்நிலையில், ஷாருக்கானுடன் தளபதி விஜய் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பரப்பப்பட்டு வருகின்றது. இதே புகைப்படத்தில் அருகில் அட்லீயும் இருக்கிறார். ஒருவேளை அட்லீ கேட்டு விஜய் ஓகே சொல்லிவிட்டார் போல. படப்பிடிப்பு துவங்கிவிட்டதோ என்னவோ என விசாரித்தால், அது ஃபேக் எடிட்டாம். 

விஜய் ஜவான் படத்தில் நடிக்க 2 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் என தெரியவந்துள்ளது.  அதன்படி செப்டம்பர் முதல் வாரத்தில் விஜய் நடிக்கும் காட்சிகள் படம்பிடிக்கப்படுமாம். பொறுத்திருந்து பார்க்கலாம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்