Thu ,May 16, 2024

சென்செக்ஸ் 73,663.72
676.69sensex(0.93%)
நிஃப்டி22,403.85
203.30sensex(0.92%)
USD
81.57
Exclusive

மாணவ,மாணவிகளுடனான சந்திப்பு.. விஜய் போட்டிருக்கும் உத்தரவு என்ன தெரியுமா..?

Aruvi Updated:
மாணவ,மாணவிகளுடனான சந்திப்பு.. விஜய் போட்டிருக்கும் உத்தரவு என்ன தெரியுமா..?Representative Image.

சென்னை: 10 மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களை சந்திக்கும் நிகழ்வு நாளை நடக்கவிருக்கும் சூழலில் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு ஒரு உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

லியோ படத்தில் நடித்துவருகிறார் விஜய். காஷ்மீர் ஷெட்யூலை முடித்துவிட்டு இப்போது சென்னை ஷெட்யூலில் படக்குழு தீவிரமாக பணியாற்றிவருகிறது. சமீபத்தில்தான் ஆதித்யராம் ஸ்டூடியோவில் செட் போடப்பட்டு 2000  நடன கலைஞர்களுடன் விஜய் நடனம் ஆடும்  பாடல் காட்சி பிரமாண்டமாக படமாக்கப்பட்டது.

படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் இந்த பாடல் ஷூட்டிங் முடித்த கையோடு விஜய் இரண்டு நாட்கள் ஷூட்டிங்கிலிருந்து பிரேக் எடுத்தார். முழு வேகத்தோடு லியோ ஷூட்டிங்கிற்கு ஒத்துழைப்பு கொடுத்த விஜய் எதற்காக திடீரென பிரேக் எடுத்தார் என்ற கேள்வி அவரது ரசிகர்களிடம் எழுந்தது. ஆனால் விஜய் ரெஸ்ட் எடுப்பதற்காக பிரேக் எடுக்கவில்லை வேறு ஒரு வேலையை செய்வதற்காகத்தான் பிரேக் எடுத்தார் என்பது பின்னர் தெரியவந்தது.

தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து மாவட்டங்களிலும்  10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மூன்று பேரை விஜய் சந்தித்து சான்றிதழ் மற்றும் ஊக்கத் தொகையை வழங்குவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே அதுதொடர்பான ஏற்பாடுகள் எந்த அளவில் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள ஷூட்டிங்கில் பிரேக் எடுத்து தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஒரு சந்திப்பை நிகழ்த்தினார்.

அந்த சந்திப்பில் மாணவ, மாணவிகளை சந்திக்கும்போது என்ன மாதிரியான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்பது தொடர்பாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த ஆலோசனையில் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு விஜய் ஒரு உத்தரவு போட்டிருப்பதாக தகவல் ஒன்று உலாவுகிறது,. அதன்படிமாணவ, மாணவிகளை சந்திக்கும் நிகழ்வின்போது யாரும் ஒரு பேனர்கூட வைக்கக்கூடாது என விஜய் கண்டிப்புடன் சொல்லிவிட்டாராம்.

ஏற்கனவே பேனர் கலாசாரத்தால் பல உயிர்கள் தமிழ்நாட்டில் போன சூழலில் அந்த மாதிரியான அசம்பாவிதம் எதுவும் தன் மக்கள் இயக்கத்தால் நடந்துவிடக்கூடாது என்பதில் விஜய் தெளிவாக இருக்கிறார். இந்த சந்திப்பு நாளை நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே விஜய்யின் சமீப கால நடவடிக்கைகள் அனைத்துமே அரசியல் அச்சாணியை மையப்படுத்திதான் சுழன்று கொண்டிருப்பதாக பலர் கூறுகின்றனர். அதற்காகத்தான் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய சொன்னது, லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை தென் தமிழ்நாட்டில் வைப்பது, பட்டினி தினத்துக்கு உணவு போட்டது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்