வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் புதிய படத்துக்கு வாரிசு என பெயர் வைத்துள்ளனர். இந்த படத்துக்காக விஜய் வாங்கிய சம்பள விவரங்கள் வெளியாகியுள்ளன.
விஜய் நடிக்கும் 66வது படமான வாரிசு திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் ரஷ்மிகா மந்தனா. மேலும் இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, குஷ்பு, ஜெயசுதா, ஷாம், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். படப்பிடிப்பு துரிதமாக நடைபெற்று வருகிறது. ஹைதராபாத்தில் செட் அமைத்தும் பின் சென்னையிலும் ஷூட்டிங் நடைபெற்றது.
பீஸ்ட் படம் தோல்வி என பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், அவரின் அடுத்த படத்துக்கு எவ்வளவு சம்பளம் என பலரும் பேசி வருகின்றனர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான பீஸ்ட் திரைப்படம் போதிய அளவு எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இதனால் படத்துக்கு பெரிய வியாபாரம் அமையவில்லை.
இதனிடையே வாரிசு திரைப்படத்துக்கு 118 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார் விஜய். பீஸ்ட் படத்துக்கும் கிட்டத்தட்ட இதே அளவு சம்பளம்தான் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. படம் வெற்றி பெற்றால் தங்களது சம்பளத்தை உயர்த்தும் நடிகர்கள் ஏன் தோல்விக்கு பிறகு சம்பளத்தை குறைத்துக் கொள்வதில்லை என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…