Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

அஜித்தின் ரீல் மகள்! முதல் படத்திலேயே இத்தனை முத்தக் காட்சிகள்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

UDHAYA KUMAR Updated:
அஜித்தின் ரீல் மகள்! முதல் படத்திலேயே இத்தனை முத்தக் காட்சிகள்! அதிர்ச்சியில் ரசிகர்கள்Representative Image.

என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் அஜித்குமார் மகளாக நடித்திருந்த நடிகை அனிகா சுரேந்திரன் தற்போது கதாநாயகியாக அறிமுகமாகிறார். ஓ மை டார்லிங் எனும் பெயரில் மெல்வின் ஜி பாபு என்பவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் அனிகா. இந்த படத்தின் டிரெய்லர் காட்சியிலேயே பல முத்தக் காட்சிகள் வருவது ரசிகர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. 

மலையாள சினிமாவில் கடந்த 2007ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் அனிகா சுரேந்திரன். 

கடந்த 2014ம் ஆண்டு அஜித்குமார் நடித்த என்னை அறிந்தால் படத்தில் அவருக்கு மகளாக நடித்திருந்தார் அனிகா. பின்னர் படவாய்ப்புகள் குறைந்தாலும் மீண்டும் தமிழில் அஜித் மகளாகவே நடித்தார். 

சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் அஜித்குமார், நயன்தாராவுக்கு மகளாக நடித்திருந்தார் அனிகா சுரேந்திரன். 

மேலும் நானும் ரவுடிதான் படத்தில் சின்ன வயது நயன்தாராவாக நடித்திருந்தார்.  தமிழின் முதல் ஜாம்பி படமான மிருதனில் ஜெயம் ரவியின் தங்கையாகவும் நடித்திரந்தார். 

கடைசியாக தமிழில் மாமனிதன் படத்தில் நடித்திருந்தார். இப்போது இவருக்கு 18 வயது ஆகிவிட்டது. இதனால் ஹீரோயின் வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. 

இவர் முதன்முதலில் தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமானார். புட்ட பொம்மா படத்தில் இவர் நடித்திருந்தார். 

மலையாளத்தில் முதன்முறையாக கதாநாயகியாக அறிமுகமாகும் படம் ஓ மை டார்லிங். இந்த படத்தின் டிரைலரில்தான் முத்தக்காட்சிகள் இடம்பெற்றிருந்தன. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்