Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உடல் எடை குறைப்புக்கு இதுதான் காரணமாம்! | Vijay sethupathi latest photo gone viral on internet

UDHAYA KUMAR Updated:
உடல் எடை குறைப்புக்கு இதுதான் காரணமாம்! | Vijay sethupathi latest photo gone viral on internetRepresentative Image.

தமிழ் திரையுலகில் எந்த வித இமேஜ் பாகுபாடும் இன்றி யாருடனும் நடிக்கும் நடிகர் என பெயர் வாங்கிவிட்டார் விஜய் சேதுபதி. மற்றவர்களுடன் நடிக்கும் படங்கள் நல்ல வெற்றியைப் பெறுவதுடன் வசூல் ரீதியாகவும் பணத்தை வாரிக் குவித்து வருகின்றது. ஆனால் சோலோ ஹீரோவாக தான் நடிக்கும் படங்கள் படுதோல்வியைச் சந்திக்கின்றன. 

இந்த விசயங்கள் விஜய் சேதுபதிக்கு தெரியாமல் இல்லை. அதுகுறித்து அவர் வருத்தப்படுவது உண்மைதான். இதனால்தானோ என்னவோ உடல் எடையைக் குறைத்து மெலிந்த தோற்றத்தில் இருக்கிறார் விஜய் சேதுபதி. 

விஜய்யுடன் மாஸ்டர், கமல்ஹாசனுடன் விக்ரம், ரஜினியுடன் பேட்ட உள்ளிட்ட படங்களில் நடித்து மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தைத் தன் பக்கம் வைத்திருக்கும் விஜய் சேதுபதியின் உடல் எடை புகைப்படம் இதோ. 

பெரும்பான்மையான படங்களில் உடல் எடை கூடி கொஞ்சம் பெரிய உடலுடன் தோற்றமளித்து வந்தார் விஜய்சேதுபதி. சில படங்களில் சிகை, தாடி மாற்றம் இருந்தாலும், உடல் எடை குறைப்பில் பெரிய அளவில் கவனம் செலுத்தாமல் இருந்துவந்தார். இப்போது இந்த தோற்றத்துக்கு மாறியுள்ளார். அடுத்து நடிக்கப்போகும் சில படங்களில் இளமையான கதாபாத்திரங்களில் நடிக்க முடிவு செய்துள்ளாராம் விஜய் சேதுபதி. 

விடுதலை, ஜவான், காந்தி டாக்ஸ் உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார் விஜய் சேதுபதி. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்