Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஒரே வாரம்தான் வலிமை, பீஸ்ட் சாதனை காலி! நொறுக்கிய விக்ரம்...!

UDHAYA KUMAR June 10, 2022 & 13:41 [IST]
ஒரே வாரம்தான் வலிமை, பீஸ்ட் சாதனை காலி! நொறுக்கிய விக்ரம்...!Representative Image.

விக்ரம்..விக்ரம்...விக்ரம்... எந்த திசை பார்த்து திரும்பினாலும் கடந்த 1 வாரமாக ஒலிக்கும் பெயர் இதுதான்.  நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொருவரும் ஒரு முறையாவது விக்ரம் திரைப்படத்தைப் பற்றி பேசியிருப்போம். அந்த கதை பற்றி விவாதித்திருப்போம் எனும் அளவுக்கு அனைவரது மனதிலும் குடியேறியுள்ளது விக்ரம் திரைப்படம். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்து திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. ஒவ்வொரு நாள் காலையிலும் சாதனை முறியடிக்கப்பட்டது என செய்தி வருகிறது. அந்த அளவுக்கு படம் வெற்றி வாகை சூடிக் கொண்டிருக்கிறது. 

தமிழகத்தில் எப்போதும் பெரிய படங்களுக்கான சண்டை விஜய், அஜித், ரஜினியிடமே ஆரம்பிக்கும். இந்த வருடத்தில் ரஜினி படம் எதுவும் இல்லை என்பதால், விஜய், அஜித் படங்கள் போட்டி போட்டன. இந்நிலையில் வலிமை மற்றும் பீஸ்ட் திரைப்படங்களை அடித்து நொறுக்கி விக்ரம் திரைப்படம் முன்னணியில் உள்ளது. 

உலக அளவில் 230 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து, பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுள்ளது விக்ரம் திரைப்படம். 500 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் வரும் என கூறப்படுகிறது. காரணம் வெறும் 7 நாட்களில் 230 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள நிலையில், இன்னும் 1 வாரம் எந்த பிரச்னையும் இல்லாமல் படம் ஓடும் என்பதால், படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்