Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஹாலிவுட்டுடன் போட்டி போடும் கமல்ஹாசன்! பாக்ஸ் ஆபிஸ பாருங்க!

UDHAYA KUMAR June 06, 2022 & 22:20 [IST]
ஹாலிவுட்டுடன் போட்டி போடும் கமல்ஹாசன்!  பாக்ஸ் ஆபிஸ பாருங்க!Representative Image.

உலக நாயகன் கமல் ஹாசன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பஹத் பாசில், நடிப்பின் நாயகன் சூர்யா உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள விக்ரம் படம் உலக அளவில் பெரும் வசூல் சாதனை புரிந்து வருகிறது.  

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் திரைப்படம் வெளியாகியிருப்பது அவரது ரசிகர்களுக்கு குதூகலத்தை ஏற்படுத்தியுள்ளது. கமல்ஹாசன் ரசிகரான லோகேஷ் கனகராஜ் எழுத்து இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வசூலைக் குவித்துள்ளது. அவர் ஃபேன்பாயாக மிகப் பெரிய சம்பவத்தைப் பண்ணியுள்ளார்.  கமல்ஹாசன் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களும் விக்ரம் படத்தைக் கொண்டாடுகின்றனர். மேலும், தமிழகம் மட்டுமின்றி உலகின் பல்வேறு நகரங்களிலும் பெரிய பெரிய வசூலைப் பெற்று வரும் விக்ரம் திரைப்படம், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஹாலிவுட் திரைப்படங்களுடன் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. 

டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், தி பேட் காய்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களை தாண்டி 3வது வசூல் செய்யும் படமாக உலக அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. 21 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது விக்ரம் திரைப்படம்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்