Fri ,Mar 01, 2024

சென்செக்ஸ் 73,745.35
1,245.05sensex(1.72%)
நிஃப்டி22,338.75
355.95sensex(1.62%)
USD
81.57
Exclusive

vikram movie audio launch telecast channel விக்ரம் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா - சுவாரஸ்ய நிகழ்வுகள் அனைத்தும் ஒரே பதிவில்

UDHAYA KUMAR May 16, 2022 & 11:12 [IST]
vikram movie audio launch telecast channel விக்ரம் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா - சுவாரஸ்ய நிகழ்வுகள் அனைத்தும் ஒரே பதிவில்Representative Image.

vikram audio launch full details | vikram audio launch trailer release event date and time, telecast channel, telecasting date and time | kamal haasan speech on vikram trailer launch event | vikram movie audio launch live telecast channel | vikram kamal movie release date | vikram kamal movie audio songs download | vikram kamal movie trailer

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் இசை & டிரெய்லர் வெளியிட்டு விழாவில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகள் அனைத்தையும் இந்த பதிவில் காண்போம். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், சூர்யா, விஜய் சேதுபதி, பஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ள விக்ரம் திரைப்படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி மாலை 6:30 க்குத் தான் ஆரம்பமானது. அதற்கு முன் பிரபல பாடகர் சீனிவாஸ் மற்றும் ஹரிச்சரன் குழுவினர்  கமல்ஹாசன் பாடல்கள்  பாடி அரங்கத்தில் அமர்ந்திருந்தவர்களை குதூகலப்படுத்தினர். திரைபிரபலங்கள் மற்றும் படத்தில் நடித்த, பணிபுரிந்த குழுவினர் என ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர்.

Image

பாடல்கள் பாடி முடித்ததும், சரியாக 6:30 க்கு நிகழ்ச்சி ஆரம்பித்தது.  பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி  நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்தார்.  இசைஞானி வாழ்த்தோடு ஆரம்பம் ஆனது டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி.  இசைஞானி திரையில் தோன்றி ராஜ்கமல் நிறுவனம் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரை வாழ்த்தி பேசினார். 

 

யாரென்று தெரிகிறதா?

அதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் என்பது யார்?  திரைத்துறையில் அவரது சாதனைகள் மற்றும் கமல்ஹாசன் திரைத்துறைக்காக கொண்டு வந்த தொழில் நுட்பங்கள் பற்றி மிகவும் விலாவாரியாக அழகாக தொகுத்து காண்பித்தனர். இது முடியவும் கமல்ஹாசன் அரங்கினில் உள்ளே வந்தார், அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அரங்கம் அதிரும்  கைதட்டல்களுடன் கமல்ஹாசன் அரங்குக்கு வந்தார்.  V என்று டிசைன் செய்யப்பட்ட கருப்பு நிற உடையுடன் அசத்தலாக வந்த கமல்ஹாசன் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து அவருக்கென ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தார். அருகில் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் இருந்தனர்.  படத்தின் நடன இயக்குநர் சான்டி மற்றும் அவரது குழுவினரின் அசத்தலான ட்ரிபியுட் நடனம் அரங்கேறியது.  கமல்ஹாசன் பாடல்களுக்கு தனது நடனத்தின் மூலம் அசர வைத்தார் சான்டி.

Breaking! Pa. Ranjith confirms film with Kamal Haasan giving details -  Tamil News - IndiaGlitz.com

கமல்ஹாசன் - பா ரஞ்சித் கூட்டணி!

அதனைத் தொடர்ந்து இயக்குநர் பா ரஞ்சித் அவர்களை மேடைக்கு அழைத்தார் திவ்யதர்ஷினி.  தனக்கும்  கமல்ஹாசன் அவர்களின் படங்களுக்குமான உறவை அழகாக சொன்னார் பா ரஞ்சித். அது திரையில் தொடர வேண்டும் என்றார். கமல்ஹாசன் அவர்களை வைத்து மதுரை பிண்ணனியில் ஒரு படம் எடுக்க ஆசை இருப்பதாக கூறி அரங்கத்தை அதிர வைத்தார். வேட்டி மடித்து கட்டி மட்டும் அல்ல, கோட்சூட் போட்டவராகவும் வருவார் என்றார். இதனால் கமல்ஹாசன் பா.ரஞ்சித் உடன் விரைவில் இணையவுள்ளார் என்கிற தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.   இதனால் கமல்ஹாசன் ரசிகர்களும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

Is veteran actor-director Santhana Bharathi joining the cast of 'Vikram'? |  Tamil Movie News - Times of India

சந்தானபாரதி

அடுத்து கமல்ஹாசனின் நீண்ட கால நண்பரும் இயக்குநருமான சந்தானபாரதி வாழ்த்தி பேசினார். தனக்கும் ராஜ்கமல் நிறுவனம் மற்றும் கமலுக்கும் உண்டான 50+ ஆண்டுகால நட்பை எடுத்துரைத்தார். சிறுவயதில் அடித்த லூட்டிகளை தற்போது சொல்ல முடியாதே என்றார். ராஜ்கமலில் தனது பங்களிப்பு சிறிதாவது இல்லாமல் எந்த படமும் வராது என சத்தியம் செய்து கொடுத்திருப்பதாக மிகப் பெருமையுடன் எடுத்துச் சொல்லி, தானும் இந்த படத்தில் நடித்திருப்பதாக பெருமையாக சொன்னார். 

Image

டிரெய்லர் வெளியீடு

இளம் இயக்குநர்கள் மூவர் மேடைக்கு ஏறி தங்களது உலகநாயகன் அனுபவங்களை எடுத்துரைத்தனர். இதற்கிடையே 8 மணிக்கு டிரைலர் லாஞ்ச் கமல்ஹாசன் ட்வீட் செய்ய வேண்டும் என நியாபகப்படுத்திக் கொண்டே இருந்தார் திவ்யதர்ஷினி. படத்தில் நடித்துள்ள நரேன், காளிதாஸ், காயத்திரி மேடையில் தோன்றி பட அனுபவங்களை பேசினார்கள். நரேன் தனது ரசிக அனிபவத்தை மிக அழகாக பகிர்ந்து கொண்டார்.

 சந்திப் கிசன் பேச்சும் மிக அருமையாக இருந்தது. மாநகரம் படத்திற்கான பட்ஜெட் தான் இந்த ஆடியோ லாஞ்சுக்கான பட்ஜெட் என்ற போது பிரமிப்பாக இருந்தது. ராஜ்கமல் நிறுவனம் திரைபடம் எடுக்க செய்யும் செலவு என்ன என்பதும் புரிந்தது. 

சரியாக மணி 8 ஆவதற்கு ஒரு நிமிடம் முன்பாக கவுன்ட்டவுன் ஆரம்பித்தது. 8 மணி ஆனதும் நம்மவர் டிரைலர் டுவிட் செய்த அடுத்த நொடி, திரையில் மிரட்டலான ட்ரெய்லர் காட்டப்பட்டது. உள்விளையாட்டு அரங்கம் அதிரும் படி கைதட்டல்கள் விசிலுடன் டிரைலர் அமைந்தது. மிரட்டலாக இருந்தது. இயக்குநர் லோகேஷ் & டீமின் கடும் உழைப்பு தெரிந்தது. நம்மவரின் "பார்த்துகலாம்" என்கிற வசன மாடுலேசன் தெறித்தது. எடிட்டர் தனது அனுபவத்தை பகிர்ந்தார். 

 

இயல்பாக பேசிய உதயநிதி

அதன்பிறகு, படத்தை விநியோகம் செய்யும் உதயநிதி அவர்கள் மேடைக்கு வந்து, விநியோக உரிமைப்பெற்றது எப்படி எனபேசினார் "மிரட்டி வாங்கினிங்களாமே என அனைவரும் பேசுகின்றனர். எழுதுகின்றனர். கமல்ஹாசன் அவர்களை யாரும் மிரட்டி பணிய வைக்க முடியாது. அது உலகத்திற்கே தெரியும் என்றார். அரசியல் வேறு இது வேறு என  கமல்ஹாசன் அவர்கள் சொல்லி, பரவாயில்லையா எனக் கேட்டு, நான் ஒகே எனக் கூறி, கடைசியில் ஓடும் ரயிலில் ஏறுவது போல் தானும் இந்தபடத்தின் அங்கம் என்பதைக் கூறிச் சென்றார். உதயநிதிக்கு முன்பு இயக்குநர் பிரபு சாலமன் அழகாக பேசினார். 

பிறகு ராதிகா சரத்குமார் & லிசி இருவரும் மேடைக்கு வந்து வாழ்த்தி பேசினார்கள். படத்தின் சண்டை இயக்குநர்கள் அன்பறிவு இரட்டையர்கள் தோன்றி பட அனுபவங்களை பகிர்ந்தனர். படத்தில் கண்ணாடி உடைக்கும் புதிய அனுபவத்தை #உலகநாயகன் அவர்களிடம் கற்ற அனுபவத்தை கூறினார்கள். இயக்குநர் பார்த்திபன் அவர்களின் பேச்சு வழக்கம் போல் வித்தியாசமாக அருமையாக இருந்தது. 

Image

4 மணி அதிகாலை காட்சி 

ஐசரி கணேஷ் பேசும் போது, எந்த படத்தையும் 4 மணி காட்சி பார்த்ததில்லை. ஆனால், இந்த படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து பார்க்கப் போவதாக உறுதி அளித்தார். இயக்குநர் மகேஷ் நாராயணன் & ஒளிப்பதிவாளர் ரத்ணவேலு இருவரும் வாழ்த்தி பேசினார்கள்.

 

அப்பன் பாட்டன் செய்த புண்ணியம்

 விஜய் சேதுபதி பேச வரும் போது அரங்கு அதிர்ந்தது. "எங்க அப்பன் பாட்டன் செய்த புண்ணியமோ தெரியலை, #கமல்ஹாசன் அவர்களோடு நடித்துவிட்டேன். உங்க இயக்கத்திலும் நடிக்க ஆசை இருப்பதாக", தனது கோரிக்கையை வைத்தார். இதயத்தை தொடும் பேச்சாக அமைந்தது. 

சிலம்பரசன் அவர்களின் பெயரைச் சொன்னதும் விசில் சத்தம் கைத்தட்டல்கள் அடங்க மிக நேரமானது. "திரையில் தனது குரு #கமல்ஹாசன் அவர்கள் என்றும், விஸ்வரூபம் பிரச்சனையின் போது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் ஒரு நாள் முழுவதும் கூடவே இருந்ததைப் பற்றி மிக நெகிழ்ச்சியாக பேசுனார். அவரும் சான்டியும் ஒரு ஸ்டெப் போட்டு காட்டி அசத்தினார்கள். 

Image

அசத்தல் அனிருத் லாயல் லோகேஷ்

அனிரூத் படத்தின் டைட்டில் ட்ராக்கை பாடி அசத்தினார். பத்தலை பத்தலை பாடலின் தமிழ், தெலுங்கு.. இந்தி என மூன்று மொழிகளிலும் நம்மவர் பாடி அசத்தியுள்ளதை பெருமையாக கூறினார். தெலுங்கு பாடல் வார்த்தைகளை நம்மவர் சரி செய்தபோது அவரின் மொழி ஆற்றலை கண்டு வியந்ததை கூறினார். 

இயக்குநர் லோகேஷ் கணகராஜ் பேச முடியாமல் ஆனந்த கண்ணீரோடு தவித்தார். தான் #உலகநாயகன் மீது கொண்ட பக்தி பாசம் பற்றி விளக்கியது நெகிழ்ச்சியாக இருந்தது. தனது உதவி இயக்குநர்களை அறிமுகம் செய்தார். ஒரு காட்சிக்கு #நம்மவர் புஷ் அப் எடுத்ததை பற்றி சொல்லி வியந்து போனார். அது நம்மவருக்கு தெரியாமல் எடுத்து வைத்துள்ளதாகவும், மேக்கிங் விடியோவில் வரும் எனக் கூறினார். இரவு மணி 10:15 ஆகிவிட்டது. கூட்டம் அப்படியே உலகநாயகனுக்காக காத்திருந்தது. 

Image

உலக நாயகனே!

அனிருத் கீபோர்டுடன் இருக்க, கமல்ஹாசன் மேடை ஏறினார். சத்தம் விண்ணைப் பிளந்தது. அன்பே சிவம் பாடலை அசத்தலாக பாடினார். பிறகு பேச ஆரம்பித்தார்  4 வருடம் உங்களுக்காக படம் இன்றி இருந்தேன். அரசியல் சினிமா பிரிக்க முடியாது. இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது. முழு நேர அரசியல்வாதி யாரும் கிடையாது.  தமிழ் மொழிக்கு கெடுதல் என்றால் குரல் கொடுப்பேன். முதல்வர் என் நண்பர். நட்பு வேறு அரசியல் வேறு. அரசியலில் அவர் அந்த பக்கம். நான் இந்த பக்கம். அரசியலையும் நட்பையும் ஒன்றாக சொல்லக்கூடாது. லோகேஷ், விஜய் சேதுபதி என ஒவ்வொருவரின் பெயர் சொல்லி நன்றி கூறினார். ராஜ்கமலின் பணியாற்றும் ஒவ்வோருவர் பெயர் சொல்லி.. குறிப்பாக ஓட்டுநர் சேட் & காலம் சென்ற எங்கள் நண்பர் முரளி அவர்கள் பெயர் சொன்னது நெகிழ்வாக இருந்தது. இறுதியாக அனைவரும் மேடையில் தோன்றி, ஆடியோ அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்யப்பட்டது. மணி 10:50. ஏறக்குறைய 5 மணி நேரம். கூட்டம் கலையாமல் காத்திருந்து நிகழ்ச்சியை பார்த்து மகிழ்ந்தனர். கூட்டத்திற்கு வந்த அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சியை காண முடிந்தது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்