Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

vikram movie collection worldwide கடந்த 5 வருசத்துல யாருமே செய்யாத சாதனை! வழிச்சி தூக்கி சாப்பிட்டுட்டு போயிட்டார் ஆண்டவர்!

UDHAYA KUMAR June 20, 2022 & 11:30 [IST]
vikram movie collection worldwide கடந்த 5 வருசத்துல யாருமே செய்யாத சாதனை! வழிச்சி தூக்கி சாப்பிட்டுட்டு போயிட்டார் ஆண்டவர்!Representative Image.

தமிழ் சினிமா வரலாற்றிலேயே மிகப் பெரிய அளவில் கொண்டாடப்படும் படமாக அமைந்துள்ளது விக்ரம். கமல்ஹாசனின் கடந்த சில ஆண்டுகளில் வெளிவந்த எந்த படங்களுக்கும் இல்லாத பெரிய புகழ் கிடைத்துள்ளது விக்ரம் படத்துக்கு.  பாலிவுட் முதல் ஹாலிவுட் ரசிகர்கள் வரை பலராலும் படம் பாராட்டப்பட்டு வருகிறது. 

அமெரிக்கா, இங்கிலாந்து, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அயல்நாடுகளிலும் படம் வேற லெவலுக்கு போய்க்கொண்டிருக்கிறது. மேலும் ஒரே வாரத்தில் வெளியான பல ஆங்கிலப் படங்களையும் தகர்த்து எறிந்து வெளிநாடு ரசிகர்களுக்கும் விருந்து படைத்து வருகிறது விக்ரம். இப்போது 500 கோடி ரூபாய் வசூலை நெருங்கிக்கொண்டிருக்கிறது கமல்ஹாசன் - லோகேஷ்கனகராஜ் கூட்டணியின் விக்ரம் திரைப்படம். 

கடின உழைப்பால் வெற்றிப் படத்தை வழங்கிய லோகேஷ் கனகராஜ் மற்றும் அவரது உதவி இயக்குநர்களுக்கு கார், பைக் என பரிசுகளை வாரி இறைத்தார். பத்திரிக்கையாளர்கள், விருந்தினர்கள் என சமபந்தி விருந்து நடத்திக் காட்டினார் கமல். மேலும் அதே விருந்தில் தான் உட்பட அனைத்து பெரிய நபர்களையும் உக்கார வைத்து அனைவருடனும் சமமாக உணவருந்தினார். 

விக்ரமின் வெற்றி கமல்ஹாசனை வீறுகொண்டு நடைபோடச் செய்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையோடு தமிழகத்தில் இந்த படம் 155 கோடி வரை வசூல் செய்துள்ளது. மேலும் சனி, ஞாயிறுகளில் மிகப் பெரிய அளவில் வசூல் செய்து இப்போது 175 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது எந்த ஒரு தமிழ் மற்றும் மற்ற திரைப்படத்துக்கும் இல்லாத பெருமை.

 மாற்று மொழியில் உருவாகி தமிழ் டப்பிங்கில் வெளியான பாகுபலி, ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் கூட பெரிய அளவில் சாதித்தபோது தமிழில் இப்படி ஒரு சாதனை படம் இல்லையே என ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தார்கள். அவர்களையெல்லாம் குதூகலப்படுத்தும் வகையில் வெளிவந்துள்ளது விக்ரம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்