Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அதற்குள் என்ன அவசரம் ஆண்டவரே! வெயிட் பண்ணிருக்கலாமே? விக்ரம் ரசிகர்கள் புலம்பல்...!

UDHAYA KUMAR June 29, 2022 & 12:12 [IST]
அதற்குள் என்ன அவசரம் ஆண்டவரே! வெயிட் பண்ணிருக்கலாமே? விக்ரம் ரசிகர்கள் புலம்பல்...!Representative Image.


விக்ரம் திரைப்படம் ஹாட்ஸ்டாரில் வரும் ஜூலை 8ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், கமல்ஹாசன் ரசிகர்கள் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பஹத் பாசில், நடிப்பின் நாயகன் சூர்யா, நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். 1986ம் ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படத்தில் வரும் அதே கதாபாத்திரம் இத்தனை ஆண்டுகள் கழித்து ஒரு மிஷனுக்காக களத்தில் இறங்குகிறது. அதில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படத்தின் கதைக்களமும் இணைகிறது. இப்படி ஒரு கற்பனையை லோகேஷ் கனகராஜ் படமாக்கியிருக்கிறார். 

விக்ரம் திரைப்படத்தின் ஆரம்ப காட்சிகளில் கமல்ஹாசன் வந்தாலும் அவரது முதல் டயலாக்கே இடைவேளையின்போதுதான். ஆரம்பிக்கலாங்களா எனத் தொடங்கி அதன்பிறகு அதிரிபுதிரி ஆக்ஷன் காட்சிகள்தான். ஆக்சன் பட விரும்பிகளுக்கு மிகவும் சிறப்பானதொரு ஆக்ஷன் மீல்ஸை தட்டு நிறைய படையலிட்டிருந்தார் லோகேஷ். 

இந்த மீல்ஸ் இப்போது பேக்கிங் செய்யப்பட்டு அவரவர் வீடுகளுக்கே டோர் டெலிவரி செய்யப்படுகிறது. வரும் ஜூலை 8ம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது விக்ரம் திரைப்படம். அதற்கான புரோமோவே மிகப் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. 

இதனைப் பார்த்த ரசிகர்கள் குறைந்தது இன்னும் இரண்டு வாரங்களாவது பொறுத்திருந்திருக்கலாமே.. அதற்குள் என்ன அவசரம் என கேட்டு வருகின்றனர். எனினும் ஹாட்ஸ்டார் இந்த விக்ரம் ஃபீவர் குறைவதற்குள் தங்களுக்கு லாபம் பார்க்க வேண்டும் என நினைப்பதும் தவறில்லை என சிலர் நினைக்கின்றனர். எது எப்படியோ இரண்டு, மூன்று முறை பார்த்தவர்கள் கூட மீண்டும் ஒருமுறை பார்க்கலாம் என்கிற ஆவலுடன் காத்திருக்கிறார்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்