Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

KGF-ஐயும் தாண்டிய எக்ஸ்பெக்டேஷன்! விக்ரம் படத்தைப் பார்க்க இத்தனை பேர்.....

UDHAYA KUMAR May 24, 2022 & 17:02 [IST]
KGF-ஐயும் தாண்டிய எக்ஸ்பெக்டேஷன்! விக்ரம் படத்தைப் பார்க்க இத்தனை பேர்..... Representative Image.

பிரபல டிக்கெட் புக்கிங் தளமான புக் மை ஷோ சமீபத்தில் போட்ட டிவீட்டில் தெரிவிக்கப்பட்ட தகவலின்படி, கேஜிஎப் படத்தையும் தாண்டிய ஒரு எதிர்பார்ப்பு விக்ரம் படத்தின்மீது இருப்பது தெரியவந்துள்ளது. 

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படம் விக்ரம். இது கமல்ஹாசன் நடித்து 1986ம் ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படத்தின் ஸ்பின்ஆஃப் போன்ற ஒரு கதாபாத்திரத்தின் கதை. இதில் கமல்ஹாசனுடன் சேர்ந்து விஜய் சேதுபதி, பஹத் பாசில் ஆகியோரும் நடித்துள்ளனர். பயங்கரமான மிரட்டல் தொணியில் வரும் படங்களில் ஒன்றாக விக்ரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. 

கைதி படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை விட 2 மடங்கு எதிர்பார்ப்பு விக்ரம் படத்துக்கு வந்துள்ளது. காரணம் முழுக்க முழுக்க இரவிலேயே எடுக்கப்பட்ட சண்டைக் காட்சிகள் உள்பட பல சூப்பரான விசயங்கள் படத்தில் இருக்கின்றன. 

சூர்யாவின் கேமியோ படத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகும் விக்ரம் திரைப்படம் அவருக்கு 6 வருட இடைவெளிக்குப் பின் வெளியாக இருப்பது கூடுதல் கவனத்தை பெறுகிறது. கமல்ஹாசன் ரசிகர்கள் இந்த படத்தை மிக தீவிரமான கொண்டாடி வருகின்றனர். படம் வெளியீட்டுக்கு முன்பாகவே லோகேஷ் கனகராஜ் பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து படம் குறித்த எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளார். 

இந்நிலையில் புக் மை ஷோ டிக்கெட் புக்கிங் ஆப்பில் விக்ரம் படத்தை காண காத்திருக்கிறோம் என பதிவிட்டவர்களின் எண்ணிக்கை 2 மில்லியன்களுக்கும் அதிகமாக உள்ளதாம். இதனை அந்நிறுவனமே டிவிட்டரில் தெரிவித்துள்ளது. கேஜிஎப் படத்துக்கும் அதிகமான எதிர்பார்ப்பு இருப்பது தெரியவந்துள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்