Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விஜய்டிவியில் கமல்ஹாசன் பங்கேற்கும் விக்ரம் ஸ்பெஷல் நிகழ்ச்சி! எத்தனை மணிக்கு தெரியுமா?

UDHAYA KUMAR May 27, 2022 & 16:53 [IST]
விஜய்டிவியில் கமல்ஹாசன் பங்கேற்கும் விக்ரம் ஸ்பெஷல் நிகழ்ச்சி! எத்தனை மணிக்கு தெரியுமா?Representative Image.

கமல்ஹாசன் பங்கேற்கும் விக்ரம் ஸ்பெஷல் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் வரும் ஞாயிற்றுக் கிழமை ஒளிபரப்பாகவுள்ளது. இதனால் படத்தின் மீது எதிர்பார்ப்பு கொண்ட அனைவரும் இந்த நிகழ்ச்சியைக் காணவும் ஆவலாக இருக்கின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் திரைப்படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ள நிலையில், நிற்க கூட நேரம் இல்லாமல் ஒரு பக்கம் கமல்ஹாசன், மறுபக்கம் லோகேஷ் கனகராஜ் என புரோமோசனுக்கு பறந்துகொண்டிருக்கிறார்கள். கமல்ஹாசன் சென்னையில் தொடங்கி, டெல்லி, துபாய், மலேசியா என பல நாடுகளிலும் விழாக்களுக்கு சென்று விக்ரம் படத்தை பிரபலப்படுத்தி வருகிறார். ஏற்கனவே கேன்ஸ் திரைப்படவிழாவின் ஒரு பகுதியாக இந்த விக்ரம் டிரெய்லரை ரிலீஸ் செய்து அங்குள்ளவர்களுக்கு படத்தை அறிமுகப்படுத்திவிட்டு வந்தார். 

லோகேஷ் கனகராஜ் மற்றும் ரத்னகுமார் உள்ளிட்டோர் பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து அசரும் வகையில் பல விசயங்களை கூறி வருகின்றனர். இன்னொரு பக்கம் சாண்டி மாஸ்டரும், நடிகை ஸ்வாஸ்டிகாவும் பல விசயங்களைப் பேசி வருகின்றனர். கலை இயக்குநர் சதீஸும் விக்ரம் படம் பற்றியும் கமல்ஹாசன், லோகேஷ் ஆகியோர் பற்றியும் பல விசயங்களை பகிர்ந்துள்ளார். இதுபோன்ற யூடியூப் சேனல் வீடியோக்களின் மூலம் பலரையும் விக்ரம் சென்றுள்ளது. மேலும் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர். 

விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் பங்குபெறும் சூப்பர் ஸ்பெஷல் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கமல்ஹாசன் பங்குபெறும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி நாளை மற்றும் நாளை மறுநாள் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஞாயிற்றுக் கிழமை காலை 11 மணிக்கு இந்த விக்ரம் ஸ்பெஷல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது. இதில் டிடி கேட்கும் கேள்விகளுக்கு கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் எப்படி பதில் சொல்கிறார்கள் என்பதைக் காண பலரும் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.  
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்