Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

vikram vedha hindi remake release date தெறிக்கவிடும் லுக்கில் ஹிருத்திக்!

UDHAYA KUMAR May 26, 2022 & 11:45 [IST]
vikram vedha hindi remake release date தெறிக்கவிடும் லுக்கில் ஹிருத்திக்!Representative Image.

புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் தமிழில் வெளியாகி வேற லெவலுக்கு ஹிட் ஆன படம் விக்ரம் வேதா. இந்த படத்தில் மாதவன் விக்ரம் வேடத்திலும் விஜய் சேதுபதி வேதாவாகவும் நடித்திருப்பர். இது விக்ரமாதித்தன் வேதாளம் போல கேள்வி பதில் பாணியில் செல்லும் திரைக்கதையாகும். 

இதே படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்கிறார்கள். அதே புஷ்கர் காயத்ரி இயக்கும் இந்த படத்துக்கு திரைக்கதை எழுதுகிறார் நீரஜ் பாண்டே. இவர் வெணஸ்டே, உன்னைப் போல் ஒருவன், ஸ்பெஷல் 26, எம்எஸ் தோனி உள்ளிட்ட படங்களின் கதையாசிரியர்.  

ஹிந்தி ரீமேக்கில் விக்ரமாக சயீப் அலி கானும், வேதாவாக ஹிருத்திக் ரோஷனும் நடிக்கவுள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் நேற்றுடன் முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் திரையரங்குகளில் ரிலீசாகும் எனவும் கூறப்படுகிறது. 

வேதாவாக நடிக்கும் ஹிருத்திக் ரோஷன் தாடியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் லாஸ்ட் போஸ்ட் வித் பியர்டு என கேப்சன் இட்டுள்ளார் என்பதால் படம் நிறைவு பெறுகிறது அல்லது கிட்டத்தட்ட நிறைவுகட்டத்தை எட்டிவிட்டது என ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். 

செப்டம்பர் 30ம் தேதி படத்தை ரிலீஸ் செய்வது குறித்து தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான பணிகள் துரிதமாக நடந்து வருகிறது எனவும் தெரியவந்துள்ளது. 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்