Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

vikrant rona trailer அதிரடி காட்டும் விக்ராந்த் ரோணா! KGFக்கு அப்றம் வேற லெவல் படமா இருக்கும்போலயே!

UDHAYA KUMAR June 23, 2022 & 17:04 [IST]
vikrant rona trailer அதிரடி காட்டும் விக்ராந்த் ரோணா! KGFக்கு அப்றம் வேற லெவல் படமா இருக்கும்போலயே!Representative Image.

கிச்சா சுதீப் நடித்துள்ள ‘விக்ராந்த் ரோணா’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘விக்ராந்த் ரோணா’. மிகப் பெரிய பொருட்செலவில்,  அனூப் பண்டாரி இயக்கியுள்ள இந்த படத்தில் சுதீப்புடன் நிரூப் பண்டாரி, ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தின் போஸ்டர் மற்றும் க்ளிம்ப்ஸ் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. 

ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் வழங்கும் இந்த படத்தை ஜாக் மஞ்சுநாத், ஷாலினி மஞ்சுநாத் ஆகியோர் தயாரித்துள்ளனர்.  இப்படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது. 

3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் ஜூலை 28 ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் வெளிநாட்டு விநியோகத்தை ஒன் டிவெண்டி 8 மீடியா (One Twenty 8 media) நிறுவனம் பெரும் தொகைக்கு பெற்றுள்ளது. ஒரு கன்னடப் படம் வெளியாவதற்கு முன்பே இவ்வளவு பெரிய விலையைப் பெற்றது இதுவே முதல்முறை என்கிறார்கள்.

விக்ராந்த் ரோணா திரைப்படத்தின் டிரெய்லர் இதோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்