Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நடிகர் விஜய் வீட்டின் முன் வைக்கப்பட்டுள்ள சாமி சிலைகள்...வைரலாகும் புகைப்படங்கள்..!

madhankumar August 03, 2022 & 16:50 [IST]
நடிகர் விஜய் வீட்டின் முன் வைக்கப்பட்டுள்ள சாமி சிலைகள்...வைரலாகும் புகைப்படங்கள்..!Representative Image.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம்வருபவர் நடிகர் விஜய், தற்போது இவர் தெலுங்கு இயக்குனர் வம்சி பைடபள்ளி இயக்கத்தில் "வாரிசு" படத்தில் நடித்துவருகிறார். இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.

இந்த படம் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் (LCU) வில் இணையுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். LCU வில் ஏற்கனவே கைதி, விக்ரம், ஆகியவை இணைந்துள்ளன. இதனையடுத்து அந்த வரிசையில் படங்கள் வெளியாக உள்ளன. இதனுடன் தளபதி 67 இணையுமா என அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் நீலாங்கரையில் உள்ள அவரது வீடு வாசலின் முன்பு உள்ள பிரமாண்ட கேட்களின் இரு புறமும் சாமி சிலைகளை வைத்துள்ளார். அதில் ஒன்று அம்மன் சிலையாகவும் மறுபுறம் விநாயகர் சிலையாகவும் உள்ளது. தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்