Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Bigg Boss season 6 - எப்ப வரப்போகுது தெரியுமா?

UDHAYAKUMAR July 25, 2022 & 16:56 [IST]
Bigg Boss season 6 - எப்ப வரப்போகுது தெரியுமா?Representative Image.

வரும் அக்டோபர் 2ம் தேதி முதல் பிக் பாஸ் சீசன் 6 ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குக் வித் கோமாளி 3 நிறைவடைந்துள்ளதைத் தொடர்ந்து அடுத்ததாக பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோக்கள் மிகுந்த வரவேற்பை பெறும். சூப்பர் சிங்கர், சூப்பர் சிங்கர் ஜூனியர், ஜோடி நம்பர் 1, கலக்கப்போவது யாரு எனத் துவங்கி லேட்டஸ்ட் குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் பயங்கர ஹிட். முதல் சீசன் சுமாராக இருந்தாலும், அடுத்தடுத்த இரண்டு சீசன்கள் மிக அதிக வரவேற்பை பெற்றிருந்தது. குக் வித் கோமாளி சீசன் 3 - இறுதி சுற்றில் நடிகை ஸ்ருத்திகா வெற்றி பெற்றார். அவருக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. இரண்டாம் இடத்தை தர்ஷன் வென்றார். 

இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து இனி அடுத்த நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சியைத் துவங்க விஜய் டிவி தரப்பு முடிவு செய்துள்ளதாகவும் அக்டோபர் 2 முதல் ஒளிபரப்பாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  இம்முறையும் கமல்தான் தொகுத்து வழங்குவாரா அல்லது சிம்புவிடம் கொடுத்துவிட்டு கட்சிப்பணிகளையும் சினிமாவையும் தொடருவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்