Thu ,Feb 29, 2024

சென்செக்ஸ் 72,500.30
195.42sensex(0.27%)
நிஃப்டி21,982.80
31.65sensex(0.14%)
USD
81.57
Exclusive

Ajith Kumar Life History Tamil: பர்த்டே ஸ்பெஷல்… தல அஜித்குமாரின் கூலான லைஃப் ஸ்டைல்…

Nandhinipriya Ganeshan April 27, 2023 & 10:45 [IST]
Ajith Kumar Life History Tamil: பர்த்டே ஸ்பெஷல்… தல அஜித்குமாரின் கூலான லைஃப் ஸ்டைல்…Representative Image.

Ajith Kumar Life History Tamil:

கடந்த 1990 ஆம் ஆண்டு "என் வீடு என் கனவர்" (ajith first movie name) என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, இப்போது திரைப்பட உலகின் டாப் நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவர், ரமேஸ்வர் சுப்ரமணியம், மோகினி மணி இருவருக்கும் மே 1, 1971 (ajith kumar birthday special) அன்று பிறந்தார். 90ஸ் கிட்ஸ்களின் "காதல் மன்னன்"....

எந்த ஒரு சினிமா பிண்ணனியும் இல்லாமல், தனி ஆளாக நின்று தன் மனஉறுதியாலும் விடாமுயற்சியாலும் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர். இவரை அவருடைய ரசிகர்கள் "தல" என அன்போடு அழைப்பார்கள். இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல், புகைப்படம் எடுப்பது, கார் மற்றும் பைக் பந்தையங்களில் கலந்துக்கொள்வது என பல திறமைகளை தனக்குள் (ajith kumar lifestyle) வைத்திருப்பவர்.

மேலும் படிக்க | Ajith Horoscope | இதுதான் தல அஜித்தின் ராசியா!

இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கில் "பிரேம புஸ்தகம்" (1993) மற்றும் ஹிந்தியில் "அசோகா" (2001) போன்ற பிறமொழி படங்களிலும் நடித்திருக்கிறார். 1993 ஆம் ஆண்டு அமராவதி படத்தில் நடித்தார், அப்படம் அவருக்கு வெற்றியை பெற்ற தந்த போதிலும், அவர் ரேஸிங்கில் கவனத்தை திருப்பினார். அப்போது ஏற்பட்ட விபத்தின் காரணமாக இரண்டு வருடங்கள் திரைப்பட வேலையில் (ajith kumar life history) இருந்து ஒதுங்கியிருந்தார். பிறகு, படிப்படியாக காதல், ஆக்ஷன் என அனைத்து விதமான திரைப்படங்களிலும் தனது எதார்த்தமான நடிப்பை வெளிபடுத்தி, ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர். இவர் நடித்த படங்களில் வரும் பாடல்கள் ஒவ்வொன்றும் இன்னும் பல நெஞ்சங்களின் இதயத்தில் பதிந்துள்ளது.

மேலும் படிக்க | Vijay Horoscope | தளபதி விஜய்யின் ஜாதக ரகசியம் இது தானா?

அதன்பிறகு, 1999 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான "வாலி" (vali ajith) திரைப்படம் இவருக்கு சிறந்த நடிகருக்கான விருதை வாங்கிக்கொடுத்தது. கிரீடம் மற்றும் பில்லா என இரண்டு ரீமேக்களில் நடித்திருந்தார், இவை இரண்டுமே மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றிகளைக் கண்டது. அதைத்தொடர்ந்து பல திரைப்படங்களில் இரட்டை வேடங்களில் நடித்து அனைத்து படங்களையும் வெற்றிப்படங்களாக ஆக்கி திரையுலகில் தனக்கென தனி முத்திரை படைத்துவருபவர்.

மேலும், "அமர்க்களம்" படத்தில் தன்னுடன் பணியாற்றிய நடிகை ஷாலினியை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு குழந்தைகளும் இருக்கின்றன. சக மனிதர்களை சமமாக மதிக்கும் குணம் கொண்ட இவர், அதிகமாக பொது விழாக்களில் தவிர்த்து வருகிறார். ஆனால், மறைமுகமாக பல பொது காரியங்களை செய்து கொண்டுவருகிறார்.

இவர் அதிகமாக குடும்பத்துடன் தான் நேரத்தை செலவிடுகிறாராம். அவ்வபோது தானே சமையல் செய்வது, குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவது என நேரத்தை கூலாக செலவிடுகிறார். இவருக்கு பிரியாணி ரொம்ப பிடிக்குமாம். அடிக்கடி ஸூட்டிங் நேரத்தில் பிரியாணி தான் (ajith kumar favourite food) அதிகமாக கேட்பாறாம். பிரியாணியை அடுத்து இட்லி, தோசை என டிஃபன் வகைதான் சாப்பிடுவாராம். ஆடம்பரத்தை அதிகம் விரும்பாதாவர். இவருக்கு உடலில் மூன்று அறுவைசிகிச்சை செய்திருப்பதால், அதிகமாக உடற்பயிற்சி ஆபத்தாக அமையும் என்பதால், ஆயுர்வேத சிகிச்சை முறையை (ajith kumar fitness plan) தான் பின்பற்றுவாராம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்