Thu ,Apr 18, 2024

சென்செக்ஸ் 73,437.01
493.33sensex(0.68%)
நிஃப்டி22,313.45
165.55sensex(0.75%)
USD
81.57
Exclusive

Vijay Horoscope | தளபதி விஜய்யின் ஜாதக ரகசியம் இது தானா?

Nandhinipriya Ganeshan Updated:
Vijay Horoscope | தளபதி விஜய்யின் ஜாதக ரகசியம் இது தானா?Representative Image.

இவரெல்லாம் எங்க நடிகராக போறாரு என்று கேலி செய்தவர்களுக்கு மத்தியில், தென்னிந்திய சினிமாவின் டாப் மற்றும் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் நம்ம தளபதி விஜய். இவருடைய ஒரிஜினல் பெயர் ஜோசப் விஜய் என்று நமக்கு தெரியும். என்ன தான் இயக்குனரின் மகன் என்றாலும், அவமானமும் தோல்வியும் இவருக்கும் இருந்தது. ஆனால், அதையெல்லாம் தவிடுபொடியாக்கி தன்னுடைய விடாமுயற்சியால் பல கோடி நெஞ்சங்களின் ஆசை நாயகனாக தமிழ் சினிமாவில் வளர்ந்து நிற்கிறார்.

Vijay Horoscope | தளபதி விஜய்யின் ஜாதக ரகசியம் இது தானா?Representative Image

விழுந்த அடியும், எழுந்த படியும்:

இவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ஆரம்பத்தில் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துவந்தார். ஆனால், கதாநாயகனாக அறிமுகமானது 1992 ஆம் ஆண்டு வெளிவந்த நாளை தீர்ப்பு திரைப்படத்தில் தான். ஆரம்பத்தில் தோற்றம், நடனம், நடிப்பு என அனைத்திலும் விமர்சிக்கப்பட்டபோதும், அஞ்சாமல் செந்தூரப்பாண்டி, ரசிகன், தேவா என பல படங்களில் நடித்தார். இதில் செந்தூரப்பாண்டி மட்டுமே ஓரளவுக்கு வெற்றியை கொடுத்தது. மற்றவையெல்லாம் கவர்ச்சி படங்களாக விமர்சிக்கப்பட்டன. இவ்வளவு படங்கள் நடித்திருந்தாலும் விஜய் அதுவரை பெண்களால், குடும்பங்களால் ஏற்றுக்கொள்ளப்படாத நடிகராகவே இருந்தார். 

Vijay Horoscope | தளபதி விஜய்யின் ஜாதக ரகசியம் இது தானா?Representative Image

ஆனால், இத்தனை விமர்சனங்களையும் தவிடு பொடியாக்கும் விதமாக 1996ல் வெளியானது 'பூவே உனக்காக' திரைப்படம். இந்த படத்தின் மூலம் தான் விஜயை தங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைக்க வைத்த வெற்றிப்படம். அப்படித்தில் வரும் பாடல்கள் அனைத்தும் தமிழ் நெஞ்சங்களில் நீங்க இடம்பிடித்துவிட்டன. இன்றைக்கும் இந்த பாடல்களுக்கு மவுஸ் குறையவில்லை. இப்படி வெற்றி, தோல்வி என சந்தித்து வந்த விஜய்யின் சினிமா பயணத்தில் இவருடைய குரலுக்கும் ரசிகர்கள் குவியத்துவங்கிவிட்டனர். 

Vijay Horoscope | தளபதி விஜய்யின் ஜாதக ரகசியம் இது தானா?Representative Image

கோடான கோடி ரசிகர்களின் ஆசை நாயகன்:

அன்றிலிருந்து இன்று வரை இவருடைய படத்தில் ஒரு பாடலாவது சொந்த குரலில் இடம்பெற்றிருக்கும். படம் ஓடவில்லையென்றால், இவர் பாடிய பாட்டு பட்டித்தொட்டி எங்கும் பட்டைய கிளப்பி விடும். காதல், குடும்பம், காமெடி, ஆக்ஷ்ன் என்ற அனைத்து விதமான படங்களிலும் தன்னுடைய அசத்தலான நடிப்பால் பட்டைய கிளப்பி, மிகப்பெரிய பிளாக்பஸ்டர்களையும், பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளையும் குவித்துவருகிறார். அதன்பின்னர், படத்தின் வெற்றி விழாவில் பேசும் இவருடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும், ரசிகர்களுக்கு விருந்தாகவே இருக்கும். 

Vijay Horoscope | தளபதி விஜய்யின் ஜாதக ரகசியம் இது தானா?Representative Image

தோற்றத்தால் விமர்சிக்கப்பட்ட இவருக்கு தற்போது பெண் ரசிகைகளின் எண்ணிக்கையோ கோடான கோடி. பணிவானவர், அமைதியானவர், மனிதர்களிடத்தில் பாகுபாடு காட்டாதவர் என்பதாலையோ என்னவோ இவரை அனைவருக்கும் பிடிக்கிறது. இவர் தன்னுடைய இயக்கத்தில் நடிக்க மாட்டாரா என்று இயக்குனர்கள் ஒருபக்கம், இவருக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என்று நடிகைகள் ஒருபக்கம் காத்துக்கிடக்கின்றனர். இப்படி தளபதி விஜய்யின் புகழை அடுக்கிக்கொண்டே போகலாம்.

Vijay Horoscope | தளபதி விஜய்யின் ஜாதக ரகசியம் இது தானா?Representative Image

விஜய் ஜாதகம்:

சரி வாங்க, நம்ம கதைக்கு வரலாம். ஒருமனிதனின் வெற்றிக்கு அவருடைய முயற்சி, தைரியம், உழைப்பு ஒருபக்கம் இருந்தாலும் அவருடைய ஜாதகமும் முக்கிய பங்கு வகிக்கிறது அல்லவா? வாங்க ஜாதகத்தின் படி இளைய தளபதியின் அவருடைய குணாதிசயம் மற்றும் பலன்களை பார்க்கலாம். 

விஜய்யின் ஜாதகத்தின்படி, இவர் அமைதியாகவும், அடக்கமாகவும், கடின உழைப்பாளியாகவும், உணர்ச்சிவசப்படக்கூடியவராகவும், ராஜதந்திரமாகவும், கலைகள் மற்றும் இசை வடிவங்களில் இயல்பாக ஈர்க்கப்படக்கூடியவராகவும் இருப்பார். புதிய தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்வதில் ஆர்வம் மிக்கவராகவும் இருப்பார். சின்ன குடும்பமாக இருந்தாலும், மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. ஆரம்பத்தில் பணப்பிரச்சனை இருந்தாலும், தனது கடின உழைப்பால் செல்வத்தையும் அதிர்ஷ்டத்தையும் பெற்றிருப்பார். விஜய்யின் பிறந்த தேதி மற்றும் நேரத்தின்படி, கிரகங்களின் குறிப்பிட்ட இடம் அவரை பிரபலமாகவும், சிறந்த ஆளுமையாகவும் மாற்றும் ராஜயோகத்தை உருவாக்குகிறது. 

Vijay Horoscope | தளபதி விஜய்யின் ஜாதக ரகசியம் இது தானா?Representative Image

தொழில் துறையில் மகத்தான பெயரையும் புகழையும் வளர்த்துக் கொள்வார். சில நேரங்களில் அவர் தீவிர சவால்களையும் போட்டிகளையும் சந்திக்க நேரிடும், அது அவருடைய வளர்ச்சியை தோற்கடிக்கும் நினைப்பவர்களை தோற்கடிக்க மட்டுமே.

ராசி - கடகம்

பிறந்த தேதி - 22 ஜூன் 1974

பிறந்த கிழமை - சனிக்கிழமை

பிறந்த நேரம் - மதியம் 12 

பிறந்த இடம் - சென்னை

ஜன்ம நட்சத்திரம் - பூசம்

ஜன்ம ராசி - சந்திரன்

Vijay Horoscope | தளபதி விஜய்யின் ஜாதக ரகசியம் இது தானா?Representative Image

விஜய்யின் எதிர்கால கணிப்பு:

விஜய்யின் ஜாதகத்துக்கு 2032 வரை சுக்கிர திசை நடக்கிறது. அதுவரை சீரான முன்னேற்றம்  மட்டுமே காணப்படும். 2025 முதல் 2031 வரை, அதாவது ஆறேழு வருடங்களுக்கு அதிகபட்சமாக 2-3 படங்கள் மட்டுமே நடிக்க வாய்ப்புள்ளது. இந்த சமயத்தில் வரும் இவர் நடிக்கும் அனைத்து படங்களுமே வெற்றியை கொடுக்கும். உதாரணமாக, 20 படங்கள் நடிந்திருந்தால் 19 படங்கள் பெரிய வெற்றியை கொடுக்கும். 2025க்கு மேல் வசூல் சக்கரவர்த்தியாக திகழப்போகிறார். உலகளவில் மிகப்பெரிய நட்சத்திரமாக ஜொலிக்கவும் வாய்ப்புண்டு.

ரசிகர்களின் வட்டம் 3-4 மடங்காக உயரும். அதுமட்டுமல்லாமல், இந்த காலக்கட்டத்தில் விஜய் அரசியலில் நுழையவும் வாய்ப்புகள் அதிகம். ஆனால், உடனடியாக இல்லை, அடித்தள வேலைகளை மட்டுமே தொடங்குவார். தமிழகத்திற்கு ஏற்கனவே ஒரு தளபதி இருக்கையில், இவரும் அரசியலில் கால் பதித்தால்? பொறுத்திருந்து பார்க்கலாம் நண்பர்களே!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்