Sat ,May 11, 2024

சென்செக்ஸ் 72,664.47
260.30sensex(0.36%)
நிஃப்டி22,055.20
97.70sensex(0.44%)
USD
81.57
Exclusive

நாய்களை பராமரிப்பு மற்றும் தடுப்பூசிக்கான அட்டவணையைப் பின்பற்றுவது எப்படி | How to follow a dog care and vaccination schedule

Vaishnavi Subramani Updated:
நாய்களை பராமரிப்பு மற்றும் தடுப்பூசிக்கான அட்டவணையைப் பின்பற்றுவது எப்படி | How to follow a dog care and vaccination schedule Representative Image.

நாய்கள் என்பது அனைவருக்கும் பிடித்த பிராணிகளில் ஒன்று. நாய் வளர்த்துவதால் வீட்டுக்கு ஒரு காவலன் ஆகவும், பாசம் அதிகமாக வைக்கும் பிராணியாகவும் மற்றும் ஆபத்து வந்தால் முதல் ஆளாக வந்து  காக்கக் கூடிய ஒரு நல்ல பிராணியாக இருக்கும்.

✤ நாய்களில் பல வகை உள்ளது. சிலர் வீட்டைப் பாதுகாக்க மற்றும் பணக்காரர் வீட்டைப் பாதுகாக்கவும், அவர்களின் சந்தோஷத்திற்கும், அதிகவிலையில் இருக்கும் நாய்களை வாங்கி வளர்ப்பார்கள். சரிவாங்க இந்த பதிவில் நாய்களைப் பராமரிப்பு மற்றும் தடுப்பூசிக்கான அட்டவணையைப் பின்பற்றுவது எப்படி என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

நாய்களை பராமரிப்பு மற்றும் தடுப்பூசிக்கான அட்டவணையைப் பின்பற்றுவது எப்படி | How to follow a dog care and vaccination schedule Representative Image

நாய்கள் பராமரிக்கும் வழிகள்

✤ நாய்கள் பராமரிப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. நாய்கள் வீட்டில் வளர்ப்பதற்குத் தனியாக இடம் ஒதுக்க வேண்டும்.

✤ நாய் ஒரு சுத்தமான மற்றும் பொதுமக்களுக்கு எந்த பிரச்சனைகளும் இல்லாமல் இருக்கும் இடத்தில் மலம் கழிக்க வைக்க வேண்டும்.

✤ ஒரு மாதத்திற்கு ஒரு முறையாவது நாய்களின் காதுகளை சுத்தப்படுத்த வேண்டும். இல்லை எனில் நாய்களுக்கு நோய் தொந்தரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதனால் மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை காதுகளை சுத்தப்படுத்த வேண்டும்.

✤ நாய்களை மாதத்திற்கு இரண்டு முறையாவது குளிப்பாட்டுவது நல்லது. இல்லை எனில் நாய்களின் உடம்பில் படும் அழுக்குகள் மூலம் நோய் தொற்றுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதனால் நீங்கள் உங்கள் நாய்களைக் குளிப்பாட்டவேண்டும்.

நாய்களை பராமரிப்பு மற்றும் தடுப்பூசிக்கான அட்டவணையைப் பின்பற்றுவது எப்படி | How to follow a dog care and vaccination schedule Representative Image

✤ நாய்களுக்குப் பிடித்த உணவுகள் மற்றும் நாய்களுக்கு எனக் கடைகளில் விற்கும் ஆரோக்கியமான உணவுகளை வாங்கி சாப்பிடுவதற்குக் கொடுக்க வேண்டும்.

✤ நாய்களின் வயதிற்கு ஏற்ப உணவுகள் சாப்பிடுவதற்குக் கொடுப்பது நல்லது. பெரிய நாய்களுக்கு எலும்புகள் போடலாம். ஆனால் சிறு வயது நாய்களுக்குப் போட கூடாது. அது செரிமான பிரச்சனைகள் மற்றும் சிறு வயது நாய்கள் என்றால் அது வாய்யில் கடித்துச் சாப்பிடுவது கஷ்டமாக இருக்கும்.

✤ நாய்களுக்கு வெறிநோய் வராமல் இருப்பதற்குத் தடுப்பூசிகள் போட்டுப் பராமரிக்க வேண்டும். நாய்களின் வயதிற்கு ஏற்றவாறு தடுப்பூசிகள் பயன்படுத்த வேண்டும்.

நாய்களை பராமரிப்பு மற்றும் தடுப்பூசிக்கான அட்டவணையைப் பின்பற்றுவது எப்படி | How to follow a dog care and vaccination schedule Representative Image

நாய்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான அட்டவணையை பின்பற்றுவதற்கான வழிகள்

✤ எந்த வகை நாய்கள் ஆக இருந்தாலும் புதிதாகப் பிறந்த நாய் என்றால் நான்கு மாதம் ஆனால் உடனடியாக அருகில் உள்ள கால்நடை மருத்துவமனை அணுகவும்.

✤ கால்நடை மருத்துவமனைக்குச் சென்றால்  அங்கு நாய்களுக்கான பரிசோதனை செய்து எந்த மாதம் கடைசியாகத் தடுப்பூசி போடப்பட்டது எனப் பார்த்து அதற்கு ஏற்ப தடுப்பூசி போட்டு விட்டு இனிமேல் எந்தெந்த மாதம் தடுப்பூசி போடவேண்டும் என அட்டவணையிட்டுத் தருவார்கள்.

✤ நீங்கள் உங்களது நாய்க்கு எப்பொழுது தடுப்பூசி போடவேண்டும் என நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.

✤ எந்த வகை நாய்கள் ஆக இருந்தாலும் பிறந்து நான்கு மாதம் முடியும் வரை வீட்டிலிருந்து வெளியில் அழைத்துச் செல்லாமல் இருப்பது நல்லது.

நாய்களை பராமரிப்பு மற்றும் தடுப்பூசிக்கான அட்டவணையைப் பின்பற்றுவது எப்படி | How to follow a dog care and vaccination schedule Representative Image

✤ பிறந்து நான்கு மாதம் ஆனால் முதல் தடுப்பூசி செலுத்துவது மிகவும் முக்கியம். அதன் பின், பொதுவாக ஒரு மாதத்திற்கு ஒரு முறையாவது தடுப்பூசி போடுவது போல் தான் இருக்கும்.

✤ தடுப்பூசி செலுத்துவதால் நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரிக்கவும் மற்றும் உடலில் நோய்கள் இருந்தால் அதையும் சரிசெய்யும்.

✤ நாய்களுக்குப் பல வகையான நோய்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது, அதில் பார்வோ வைரஸ் மற்றும் ரேபிஸ் போன்ற நோய்களுக்குத் தடுப்பூசிகள் கண்டிப்பாகப் போடவேண்டும்.

✤ ரேபிஸ் நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிப்பதற்கு,வருடத்திற்கு ஒரு முறை இந்த தடுப்பூசியைப் போடவேண்டும்.

✤ நாய்கள் பிறந்து நான்கு மாதத்திலிருந்து இந்த ரேபிஸ் நோய் எதிர்ப்புச் சக்தி தடுப்பூசியைச் செலுத்த வேண்டும். இந்த மாதிரியான தடுப்பூசிகளைச் செலுத்திய உடன் வெளியில் அழைத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

நாய்களை பராமரிப்பு மற்றும் தடுப்பூசிக்கான அட்டவணையைப் பின்பற்றுவது எப்படி | How to follow a dog care and vaccination schedule Representative Image

✤ தடுப்பூசி போட்டு நான்கு மாதம் வரை வெளியில் அழைத்துச் செல்லக்கூடாது. நான்கு மாதத்திற்குப் பிறகு, உடல் நிலை நன்றாக இருந்தால் மட்டும் அழைத்து செல்லலாம்.

✤ விருப்பம் இருந்தால், நாய்களின் உடல் அமைப்பு மற்றும் உடல் கூறுகள் பார்த்து எலிக்காய்ச்சல் தடுப்பூசி போடுவது நல்லது.

✤ நாய்களுக்கு வெறி பிடிக்காமல் இருப்பதற்கு தடுப்பூசி போட வேண்டும். மாதத்திற்கு ஒரு முறையாவது போடவேண்டும்.

✤ மூன்று வருடத்திற்கு ஒரு முறையாவது கால் நடைமருத்துவரை அணுக வேண்டும். நாய்களின் உடல் பரிசோதனை செய்து உடலில் பிரச்சனைகள் உள்ளதா எனத் தெரிந்து கொள்ள வேண்டும்.

✤ மனிதர் போல் நாய்களையும் நினைத்து வீட்டில் ஒரு உறுப்பினராக வளர்க்க வேண்டும். அதற்கு தேவையான தடுப்பூசி மற்றும் பராமரித்து வைத்து கொள்வது வேண்டும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்