Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Health Benefits of Jasmin Flower: அடேங்கப்பா மல்லிகை பூவுல இத்தன மருத்துவகுணங்களா? 

Nandhinipriya Ganeshan June 26, 2022 & 19:00 [IST]
Health Benefits of Jasmin Flower: அடேங்கப்பா மல்லிகை பூவுல இத்தன மருத்துவகுணங்களா? Representative Image.

Health Benefits of Jasmin Flower: பெண்களுக்கு மிகவும் பிடித்த பூக்களில் ஒன்று மல்லிகை பூ. ஆனால், இதன் சீசனில் மட்டுமே இதை ஆசைத்தீர தலையில் வைத்துக் கொள்ள முடியும். ஏனென்றால் சீசன் முடிந்து விட்டாலே மல்லிகை பூவிற்கு டிமாண்ட் அதிகமாகிவிடும். அதுவும் கல்யாண சீசனில் சொல்லவே வேண்டாம். தங்கத்திற்கு நிகரான விலையில் விற்பனை செய்யப்படும். 

பெண்களின் கூந்தலை அலங்கரிக்கும் மல்லிகையில் உள்ள மருத்துவகுணங்கள் தெரிந்தால் ஆச்சரியப்பட்டு போய்விடுவீர்கள். ஆமாங்க, இந்த பூவில் அத்தனை மருத்துவ குணங்கள் ஒளிந்திருக்கின்றன. நிச்சியம் இது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. வாங்க தெரிந்துக் கொள்ளலாம்.

மல்லிகையின் மருத்துவகுணங்கள்:

❖ மல்லிகை பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து, அதோடு சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் கண்ணில் வளரும் சதை (இதை கண் புறை என்றும் சொல்வார்கள்) வளர்ச்சி குறைந்து, படிப்படியாக தெளிவான பார்வை பெறமுடியும்.

❖ மல்லிகை மொட்டுகளை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் சம்பந்தமான கோளாறுகள், மஞ்சள் காமாலை, கண் நோய்கள் போன்ற அனைத்து நோய்களும் குணமாகும்.

❖ குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் மார்பில் கட்டியுள்ள பாலை வெளியேற்றவும், வலியை போக்கவும் மல்லிகை பூ சிறந்த மருந்து. சிறிதளவு மல்லிகைப் பூவை அரைத்து மார்பகத்தில் பற்று போட வேண்டும். இதனால் மார்பக வலி குறைந்து, பால் சுரப்பதும் நிற்கும். 

❖ சிறிதளவு மல்லிகை பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து, வடிக்கட்டி அருந்தினால் வயிற்றி இருக்கும் குடல் புழுக்கள் (medical benefits jasmine flower) நீங்கும்.

❖ மல்லிகைப் பொடி டீ தினமும் குடித்து வந்தால் எலும்புருக்கு நோய், நுரையீரல் புற்று நோய்களின் பாதிப்பு படிப்படியாக குறைவதோடு மட்டுமல்லாமல் சிறுநீரக கற்களும் நீங்கும். மல்லிகை பூக்களை நிழலில் உலர்த்தி காயவைத்து அரைத்தால் மல்லிகை  பொடி ரெடி.


குறிப்பா இந்த பிரச்சனை இருக்கும் பெண்கள் வாழைப்பூவை கட்டாயம் உணவில் சேர்த்துக்கணுமாம்... 


உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்