Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Get Rid of Migraine Headache at Home in Tamil: அடிக்கடி ஒற்றை தலைவலி வருவதற்கு இதுதான் காரணமாம்... கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Nandhinipriya Ganeshan July 29, 2022 & 11:30 [IST]
How to Get Rid of Migraine Headache at Home in Tamil: அடிக்கடி ஒற்றை தலைவலி வருவதற்கு இதுதான் காரணமாம்... கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!Representative Image.

Headache Home Treatment in Tamil: ஒற்றைத் தலைவலி (Migraine) என்பது தலையின் ஒன்று அல்லது இரண்டு பக்கங்களிலும் கடுமையான வலியை ஏற்படுத்தக்கூடிய ஒரு தலைவலி. ஆண்களுடன் ஒப்பிடும்போது பெரும்பாலான பெண்கள் இந்த நரம்பியல் நோயால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இது நாளின் எந்த நேரத்திலும் ஏற்படலாம், மேலும் இந்த வலி மணிநேரங்கள் அல்லது நாட்கள் வரை கூட நீடிக்கும். இந்த கடுமையான ஒற்றை தலைவலி பொதுவாக நெற்றியில் அல்லது கண்களைச் சுற்றி தான் வருகிறது.

ஒற்றைத் தலைவலியின் அறிகுறிகள்:

ஒற்றைத்தலைவலியின் முதன்மையான அறிகுறி தலைவலி. ஒற்றைத் தலைவலி என்பது நபருக்கு நபர் வேறுபடும். அதுமட்டுமல்லாமல், பலருக்கு ஒற்றைத் தலைவலி பல நிலைகளில் நிகழ்கின்றன. மேலும் ஒவ்வொரு கட்டத்திலும் வெவ்வேறு அறிகுறிகள் ஏற்படலாம். ஒற்றை தலைவலியில் மொத்தம் நான்கு நிலைகள் உள்ளன. அதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்...

ப்ரோட்ரோம் | Prodrome

இவை ஒற்றைத் தலைவலிக்கான ஆரம்ப எச்சரிக்கைகள் ஆகும். ஒற்றைத் தலைவலி வருவதற்கு 1 அல்லது 2 நாட்களுக்கு முன்பும், சில சமயங்களில் அதற்கு முந்தைய நாளிலும் கூட கீழ்க்காணும் அறிகுறிகளை நீங்கள்  உணரலாம்;

  • சோர்வு
  • மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு
  • குமட்டல்
  • பசி
  • தசைகள் விறைப்பு
  • அதிகமாக சிறுநீர் கழிப்பு
  • தூங்குவதில் சிரமம்
  • மனச்சோர்வு

ஆரா | Aura

இது இரண்டாவது நிலையாகும். ஆரா என்பது ஒற்றைத் தலைவலி தாக்குதலுக்கு முன் அல்லது அதோடு கூடவே ஏற்படும் உணர்ச்சிகரமான் மாற்றங்களாகும். இதில் கீழ்க்காணும் அறிகுறிகள் அடங்கும்.

  • கண்களுக்கு வெவ்வேறு வடிவங்கள் அல்லது புள்ளிகள் போன்றவை காட்சிப்படுதல்
  • தெளிவாகப் பேச முடியாது
  • வாசனை அல்லது சுவையில் மாற்றம்
  • ஏதோ ஒரு மாதிரியான ஒலி காதுகளில் கேட்டு கொண்டே இருப்பது.
  • தற்காலிக பார்வை இழப்பு

தலைவலி | Headache

ஒற்றைத் தலைவலி பொதுவாக மந்தமான வலியாகத் தொடங்கி மோசமான வலியாக உருவாகிறது. பெரும்பாலான ஒற்றைத் தலைவலி நான்கு மணி நேரம் முதல் 3 நாட்கள் வரை நீடிக்கும். உடல் செயல்பாடுகளைச் செய்யும்போது இதன் வலி மேலும் மோசமாகிறது. அறிகுறிகளாவன;

  • வாசனை, ஒளி உணர்திறன்
  • கழுத்தில் வலி
  • மனச்சோர்வு
  • குமட்டல் மற்றும் வாந்தி
  • தூக்கமின்மை

போஸ்ட் ட்ரோம் | Post-drome

இது "மைக்ரேன் ஹேங்கொவர்" என்று அழைக்கப்படுகிறது. இது ஒற்றைத் தலைவலியின் இறுதிக் கட்டமாகும். ஒற்றைத் தலைவலி உள்ளவர்களில் 80% பேர் கீழ்க்காணும் அறிகுறிகளை அனுபவிக்கிறார்கள்.

  • அதிக களைப்பு
  • சோர்வு
  • கவனம் செலுத்த முடியாத நிலை
  • குமட்டல்
  • கழுத்து இறுக்கம்
  • பலவீனம்

ஒற்றைத் தலைவலிக்கு என்ன காரணம்?

பல காரணிகள் சிலருக்கு ஒற்றைத் தலைவலியைத் தூண்டும். ஒவ்வொரு நபருக்கும் காரணங்கள் மாறுபடலாம். சில பொதுவான காரணங்கள்;

  • பெண்களில் ஹார்மோன் மாற்றங்கள்
  • போதிய அல்லது அதிக தூக்கமின்மை
  • வானிலை மாற்றங்கள்
  • ஆல்கஹால்
  • அதிகப்படியான மன அழுத்தம்
  • நீர்ச்சத்து குறைபாடு
  • உண்ணாவிரதம் இருப்பது அல்லது உணவைத் தவிர்ப்பது
  • காஃபின்
  • உரத்த சத்தங்கள்
  • புகைபிடித்தல்
  • பயணம்
  • குறிப்பிட்ட உணவுகள் மற்றும் உணவு சேர்க்கைகள்
  • மருந்துகள்
  • மரபியல்
  • தலையில் காயம்
  • அதிகமான ஒளியை பார்ப்பது
  • அதிகப்படியான வாசனை

ஒற்றைத் தலைவலிக்கான சிகிச்சைகள்:

கீழ்க்காணும் சிகிச்சைகள் (one side headache treatment in tamil) மூலம் ஒற்றை தலைவலியை எளிதாக்கலாம்.

  • விரைவான வலி நிவாரணத்திற்கு ஆஸ்பிரின், காஃபின், அசெட்டமினோஃபென் மற்றும் இப்யூபுரூஃபன் போன்ற மருந்துகளை (OTC) பயன்படுத்தவும். OTC வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்ளும்போது கவனமாக இருங்கள், ஏனெனில் OTC ஐ அதிகமாக உட்கொள்வது உங்கள் தலைவலியை அதிகரிக்கலாம். நீங்கள் 19 வயதிற்குட்பட்டவராக இருந்தால் OTC வலி மருந்துகளைத் தவிர்க்கவும், ஏனெனில் இது Reye's syndrome ஆபத்தை உருவாக்கும். வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள், ஏனெனில் அவர்கள் உங்கள் நிலையைப் பொறுத்து சரியான மருந்தை பரிந்துரைப்பார்கள்.
  • டிரிப்டான்ஸ், இந்த மருந்துகள் உங்கள் மூளையில் உள்ள இரசாயனங்களை சமநிலைப்படுத்த உதவுகின்றன.
  • குமட்டல் மருந்துகள்.
  • எர்கோடமைன் (கஃபர்கோட், மிகர்கோட், எர்கோமர்). இது உங்கள் தலைவலிக்கும் நன்றாக வேலை செய்யும்.
  • சில சமயங்களில், பிற சிகிச்சைகள் பலனளிக்கவில்லை என்றால், உங்கள் மருத்துவர் உங்களுக்கு ubrogepant (Ubrelvy) அல்லது rimegepant (Nurtec) பரிந்துரைக்கலாம்.

ஒற்றைத் தலைவலிக்கான வீட்டு வைத்தியங்கள்

இயற்கை வைத்தியம் மருந்துகள் இல்லாதது மற்றும் சில நேரங்களில் வீட்டிலேயே ஒற்றைத் தலைவலியைத் தடுப்பதற்கான எளிதான தேர்வாகும். ஒற்றைத் தலைவலி அறிகுறிகளைக் குறைக்க கீழ்க்காணும் வீட்டு வைத்தியங்கள் (headache treatment at home in tamil) கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • ஒற்றைத் தலைவலியைப் போக்க லாவெண்டர் எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு பாத்திரத்தில் சூடான தண்ணீரை எடுத்து கொண்டு, அதில் 2-3 சொட்டு லாவெண்டரை சேர்த்து, ஆவி பிடிங்கள். மேலும், லாவெண்டர் எண்ணெயை  உங்கள் சருமத்தை மசாஜ் செய்யவும்  பயன்படுத்தலாம்.
  • விரைவான நிவாரணம் பெற அக்குபிரஷரை முயற்சி செய்யுங்கள்.
  • உங்கள் உணவில் மெக்னீசியம் சேர்க்க முயற்சி செய்யுங்கள், ஏனெனில் மெக்னீசியம் குறைபாடு தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலியை உருவாக்கலாம். மெக்னீசியம் நிறைந்த உணவுகள்;
    • முந்திரி பருப்பு
    • க்ரோட்ஸ்
    • முட்டை
    • பால்
    • பாதாம்
    • எள்
    • பிரேசில் விதை
    • சூரியகாந்தி விதை
    • பீனட் பட்டர்
  • உங்கள் நெற்றியில் மிளகுக்கீரை எண்ணெயை தடவுவது குமட்டல், வலி மற்றும் ஒளியின் உணர்திறன் போன்ற ஒற்றைத் தலைவலி அறிகுறிகளைத் தடுக்க உதவும்.
  • ஒற்றை தலைவலிக்கு இஞ்சியும் ஒரு நல்ல இயற்கை மருந்து தான். 
  • வாரத்திற்கு ஒரு முறையாவது தலையில் எண்ணெய் வைத்து (headache treatment in tamil) மசாஜ் செய்யுங்கள். இது நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும். மேலும் மன அழுத்தம், பதட்டம் மற்றும் இதய துடிப்பு ஆகியவற்றையும் குறைக்கிறது.

ஒற்றைத் தலைவலியை எப்படி தடுப்பது?

  • ஒற்றைத் தலைவலியைத் தூண்டும் உணவுகளைத் தவிர்க்கவும்
  • தொடர்ந்து உடற்பயிற்சி செய்யுங்கள்
  • மன அழுத்தத்தை கட்டுப்படுத்துங்கள்
  • நன்றாக தூங்குங்கள்
  • உங்களை நீரேற்றமாக வைத்துக் கொள்ளுங்கள்
  • உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்