Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

‘அந்த பேச்சே இருக்கக்கூடாது’ - அமைச்சர் மா.சு.விற்கு மருத்துவர்கள் சங்கம் கண்டனம்! 

Kanimozhi Updated:
‘அந்த பேச்சே இருக்கக்கூடாது’ - அமைச்சர் மா.சு.விற்கு மருத்துவர்கள் சங்கம் கண்டனம்! Representative Image.

தமிழகத்தில் 100 விழுக்காடு சுகப்பிரசவம் என்ற இலக்கை அடைய வேண்டும் என்ற நோக்கோடு மருத்துவர்கள் செயல்பட வேண்டும் என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் பொதுவெளியில் பேசி வருவதை தவிர்க்க வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

நெல்லையில் மருத்துவர் ரவீந்திரநாத் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் 100 விழுக்காடு சுகப்பிரசவம் என்ற இலக்கை அடைய வேண்டும் என்ற நோக்கோடு மருத்துவர்கள் செயல்பட வேண்டும் என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் பொதுவெளியில் பேசி வருவதை தவிர்க்க வேண்டும் என்றும், மனிதர்களின் பரிணாம வளர்ச்சியால் இடுப்பு எழுப்பு குறுகியதால் சுகப்பிரசவம் குறைந்துள்ளது என்ற அறிவியலை அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். 

100 விழுக்காடு சுகப்பிரசவம் சாத்தியமில்லை என உறுதியாக கூறிய அவர், யோகா செய்வதாலும், உடல் உழைப்பாலும்  சுகப்பிரசவம் நிகழும் என்ற அமைச்சரின் கருத்து பிற்போக்கு தனமானது, அறிவியலுக்கு புறம்பானது எனத் தெரிவித்துள்ளார். 

உலக நல நிறுவனம் 10-15 விழுக்காடு சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம் என அனுமதியளித்துள்ளதை சுட்டிக்காட்டிய ரவீந்திரநாத், சுகாதார துறையில் காலிப்பணியிடங்களை மத்திய அரசின் அழுத்தம் மூலம் தமிழக அரசு நிரப்ப கூடாது என்றும், கொரானா இரண்டாம் அலையில் சிறப்பாக செயல்பட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் 100% சுகப்பிரச்சவம் என்ற இலக்கு நிர்ணயிப்பது போன்ற அறிவியலுக்கு புறம்பான கருத்துகளை கூறுவதை தவிர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்