Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

“ஜெயக்குமார் ஊமையாகிடனும்”... ஓபிஎஸ் அணி முக்கிய புள்ளி சர்ச்சை பேச்சு! 

KANIMOZHI Updated:
“ஜெயக்குமார் ஊமையாகிடனும்”... ஓபிஎஸ் அணி முக்கிய புள்ளி சர்ச்சை பேச்சு! Representative Image.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நியமித்த மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னை வேப்பேரியில்  உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இதில் ஜேசிடி.பிரபாகரன், வைத்தியலிங்கம் உள்ளிட்ட  88 மாவட்ட செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் என 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பேசிய நமது அம்மா நாளிதழின் முன்னாள் தலைமை ஆசிரியரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மருதுஅழகுராஜ் பேசுகையில், அதிமுகவுக்கு இரண்டாம் ராமச்சந்திரனாக வந்துள்ளவர் பண்ருட்டி ராமச்சந்திரன். அரசியல் மூத்தவர் அவைத்தலைவராக இருக்கிறார். 

பூட்டிய வாடி வாசலை திறந்து காட்டியவர் ஓ.பன்னீர்செல்வம். இவர் 2026ல் முதலமைச்சராக மீண்டும் முடிசூட்டுவார் என்றார். வனவாசம் சென்ற ராமனுக்கு முதுமை வரவில்லை. அதேபோல் ஓபிஎஸ் எந்த சூழ்நிலையிலும் எதற்கும் பதறியதில்லை. எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பவர். பொன்விழா காலத்தில் அதிமுகவை புண்விழாவாக மாற்றியவர் எடப்பாடி பழனிசாமி எனக்குற்றச்சாட்டினார். 

கூட்டுவதற்கு வாளியோடு வந்து, விமானத்தில் குப்பை பெருக்குபவராக வந்தவர் எடப்பாடி பழனிசாமி.  விமானத்தை ஓட்டுவது எப்படி என புத்தகத்தை படித்து பைலட்டாகி விமானத்தை ஓட்டிய அந்த குப்பை பெருக்குபவர், ரெக்கை கட்டி பறந்தார். ஆனால் அவர் விமானத்தை இறக்கத் தெரியாமல் தத்தளிப்பது போல எடப்பாடி பழனிசாமி தடுமாறிக் கொண்டிருக்கிறார் என இபிஎஸைக் கடுமையாக சாடினார். 

தொடர்ந்து பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி பக்கம் டெண்டர் எடுத்தவர்கள் மட்டும் இருக்கிறார்கள். இயேசு கிறிஸ்துவிடம் ஐந்து வரங்கள் கேட்பதாகவும் கேபி முனுசாமியை பாமகவிற்கு அனுப்பிவிட வேண்டும் என்றும் உதயக்குமாருக்கு உண்மையைப் பேசக் கற்றுக்கொடு என்றும் ஜெயக்குமாரை ஊமையாக்கி விடு என்றும், சிவி சண்முகத்துக்கு நிதானத்தை்கொடு என்றும்  எடப்பாடியை ஏழையாக்கி விடு என்ற வரம் வேண்டும் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்