Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தமிழக இளைஞர்களுக்கு அடித்த ஜாக்பாட்; டாடா நிறுவனம் அதிரடி அறிவிப்பு! 

KANIMOZHI Updated:
தமிழக இளைஞர்களுக்கு அடித்த ஜாக்பாட்; டாடா நிறுவனம் அதிரடி அறிவிப்பு! Representative Image.

டாடா நிறுவனத்தில் இனிமேல் வட மாநில தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தமாட்டோம் என அந்நிறுவனத்தின் இயக்குநர் விவேகானந்தன் தெரிவித்துள்ளார். 


ஒசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் புதியதாக தேர்வு செய்யப்பட்ட தமிழர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா கெலமங்கலம் அருகே உள்ள அந்நிறுவனத்தில் இயக்குநர் விவேகானந்தன் தலைமையில்  நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானுரெட்டி, மக்களவை உறுப்பினர் டாக்டர் அ.செல்லகுமார், எம்எல்ஏக்கள் ஒய்.பிரகாஷ் டி.ராமச்சந்திரன்), கே.பி.முனுசாமி), மதியழகன், அன்புசெழியன, ஒசூர் மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த விழாவில் பேசிய விவேகானந்தன்: ஒசூர் அருகே திம்ஜேப்பள்ளியில் 500 ஏக்கர் நிலப்பரப்பில் 2020 ல் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தொடங்க முடிவு செய்யப்பட்டது. ஒன்றரை ஆண்டுக்குள் தொழிற்சாலை கட்டி முடித்து செல்போன் உதிரி பாகங்கள் உற்பத்தி தொடங்கியுள்ளது.

ஜனவரி முதல் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது. கடிகாரம் எவ்வளவு நுணுக்கமாக தயாரிக்கப்படுகிறதோ, அதேபோன்று செல்போன் உதிரி பாகங்களும் தயாரிக்கப்படுகிறது. 

இந்தியாவிலேயே அதிக முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ள தொழில்சாலை இது. இந்த தொழில்சாலையில் 100 ரோபோக்கள் இயங்கிக் கொண்டு இருக்கிறது. 98 சதவிகித தொழிலாளர்கள் திறன் மிக்க வேலை செய்து வருகின்றனர். இந்த தொழில்சாலையில் உள்ள இயந்திரங்கள் அனைத்தும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. 1000 க்கும் அதிகமான சி.என்.சி.இயந்திரங்கள் இயங்கி வருகின்றன.

 எங்கள் தொழில்சாலையில் 90 சதவிகிதம் தொழிலாளர்கள் மகளிர். பெண்களின் முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றமாகும். குறிப்பாக நேப்பாள், பூடான், ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் மகளிர் 60 சதவிகிதம் முதல் 90 சதவிகிதம் வரை உற்பத்தி துறையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இந்தியாவில் 23 சதவிகித பெண்கள் மட்டுமே உற்பத்தி பொருளாதாரத்தில் பணி செய்து வருகின்றனர். இந்தியாவில் உற்பத்தி பொருளாதாரத்தில் மகளிரின் பங்கு அதிகரிக்க வேண்டும்.

 ஒசூர் டாடா நிறுவனத்தில் 10 ஆயிரம் பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதில் 3500 மகளிர் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இந்தத் தொழிற்சாலைகளில் ஒவ்வொருத்துறை தலைவர்கள் மகளிர் மட்டுமே. 500 ஏக்கர் இந்தத் தொழில்சாலையில் 75 ஏக்கர் நிலத்தில் காடு வளர்க்க உள்ளோம். 15 ஆயிரம் மகளிர் தங்கும் வகையில் குடியிருப்புகள் கட்டப்படும். மேலும் இங்கு பணியில் உள்ள மகளிருக்கு நல்ல உணவு, தங்கும் வசதி, மேல் கல்வி வசதி செய்து கொடுக்கப்படும். 

இது இரண்டாவது ஒசூராக மாற்றுவோம். நாட்டையும், தமிழ்நாட்டையும் பொருளாதார முன்னேற்றப்பாதையில் டாடா நிறுவனம் அழைத்துச் செல்லும் எனக் கூறினார். 

இனிமேல் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வட மாநில தொழிலாளர்களை நியமிக்க மாட்டோம் என்றார்.கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும். இதுவரை இந்நிறுவனத்தில் 9 ஆயிரம் நபர்கள் வேலை பெற்றுள்ளார்கள். அவற்றில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை
சேர்ந்த 3 ஆயிரத்தும் 500 பேர் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்