Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஊதிய முரண்பாடுகளை களைந்திடுக; ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம்!

KANIMOZHI Updated:
ஊதிய முரண்பாடுகளை களைந்திடுக; ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம்!Representative Image.

இன்று தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.  அதன் ஒரு பகுதியாக  சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் தங்களது வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் ஜாக்டோ ஜியோவின் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். CPS திட்டத்தை ரத்து செய்தல்,  ஊதிய முரண்பாட்டை களைதல், காலிப்பணியிடங்களை நிரப்புதல், காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

* CPS திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

* இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.

* முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத்தொகை (DA) சரண்டர், உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் உள்ளிட்டவற்றை உடனே வழங்கவேண்டும்.

* தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை உதியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், MRB செவிலியர், வருவாய் கிராம உதவியாளர்கள் மற்றும் ஊர்ப்புற நூலகர் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும்.

* ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரியும் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பகுநேர ஆசிரியர்கள் ஆகியோர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.  காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்யவேண்டும்.

* சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை முறைப்படுத்தவேண்டும்.

* 7வது ஊதியக்குழுவின் 21 மாத நிலுவைத் தொகயை வழங்கவேண்டும். ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்