Blood Rain: சஹாராவில் இருந்து தூசி மேகத்துடன் பலத்த இடியுடன் கூடிய மழை கலந்துள்ளதால் இந்த வாரம் இங்கிலாந்தில் "இரத்த மழை" பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மின்னல், பலத்த காற்று மற்றும் ஆலங்கட்டி மழை வரும் நாட்களில் நாட்டின் சில பகுதிகளில் சிவப்பு அல்லது ஆரஞ்சு மழை பெய்யலாம். மேலும், இரத்த மழை என்பது ஒப்பீட்டளவில் அதிக செறிவு கொண்ட சிவப்பு நிற தூசி அல்லது துகள்கள் மழையுடன் கலக்கும் போது இந்த நிகழ்வு நிகழ்கிறது. இது தான் மழை பெய்யும்போது சிவப்பு நிறமாக காட்சி (What is Blood Rain) அளிக்கிறது.
அதுமட்டுமல்லாமல், லண்டன் மற்றும் தென்கிழக்கு பகுதிகளுக்கு இடியுடன் கூடிய மழை தொடர்பாக இன்று காலை வரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், மக்களின் பயணத்துக்கு இடையூறு ஏற்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அங்கு மக்கள் கடும் வெயிலால தவித்த நிலையில், இப்போது திடீரென வானிலை மாறி மழை பொழியும் நிலை உருவாகிப்பதால் மக்கள் ஒருபுறம் மகிழ்ச்சியுடனும், மறுபுறம் சூறாவளியுடன் கூடிய மழையால் பாதிப்பு ஏற்படுவதை நினைத்தும் அச்சத்தில் இருக்கின்றார்களாம்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…