Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Katchatheevu Issue: குத்தகைக்கு வரும் கச்சத்தீவு...இந்தியாவிடம் ஒப்படைக்க இலங்கை முடிவு?

madhankumar May 20, 2022 & 10:14 [IST]
Katchatheevu Issue: குத்தகைக்கு வரும் கச்சத்தீவு...இந்தியாவிடம் ஒப்படைக்க இலங்கை முடிவு?Representative Image.

கச்சத்தீவை இந்தியாவிற்கு குத்தகைக்கு விடக்கூடாது என போர்க்கொடி பிடித்துள்ள இலங்கை மீனவர்கள், இதனால் நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்து இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்திய பிரதமராக இந்திராகாந்தி இருந்த காலகட்டத்தில் தமிழகத்திற்கு சொந்தமாக இருந்த கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது தமிழகத்தின் முதலமைச்சராக மறைந்த கலைஞர் கருணாநிதி இருந்தார். இந்த சம்பவம் நாட்டுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கு மக்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.மேலும் அப்பகுதியில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களும் கைது செய்யப்பட்டு வந்தனர். இதனால் இந்தியா- இலங்கை அரசுகளுக்கு கடும் நெருக்கடி நிலவியது. 

மேலும் தற்போதைய திமுக அரசு கச்சத்தீவை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தது. இந்தநிலையில் இலங்கை  பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இந்திய அரசு பெருமளவு கடனுதவிகளை வழங்கி வருகிறது. இதனால் இந்தியாவிடம் இருந்து இலங்கை பெற்ற கச்சத்தீவை நீண்டகால குத்தகைக்கு இந்தியா திரும்பப் பெற வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. அப்படி நீண்டகால குத்தகைக்கு கச்சத்தீவு கொடுக்கப்பட்டால் இருநாட்டு மீனவர் பிரச்சனை முடிவுக்கு வரும் என்பது பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது.

இலங்கை முழுவதும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலையில் கச்சத்தீவை இந்தியாவிற்கு குத்தைகைக்கு விடக்கூடாது எனவும் இதனால் இலங்கையின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும் என மன்னாரில் உள்ள அலுவலகத்தில், செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்க சமூகத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் கூறியுள்ளார்.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்